பாட்டியாலாவின் மொகிந்தர் சிங்
மொகிந்தர் சிங் (Mohinder Singh) 1862 முதல் 1876 வரை பாட்டியாலா சுதேச அரசின் அரசராக இருந்தார்.
மொகிந்தர் சிங் Mohindra Singh | |
---|---|
![]() 1870 ஆம் ஆண்டில் மொகிந்தர் சிங் | |
பாட்டியாலாவின் மகாராசா | |
ஆட்சிக்காலம் | 1862-1876 |
முன்னையவர் | மகாராசா நரிந்தர் சிங் |
பின்னையவர் | ராசீந்தர் சிங் |
பிறப்பு | செப்டம்பர் 16, 1852 |
இறப்பு | 13 ஏப்ரல் 1876 மோதி பாக் அரண்மணை, பட்டியாலா | (அகவை 23)
குழந்தைகளின் பெயர்கள் | ராசீந்தர் சிங் |
அரசமரபு | புல்கியன் |
தந்தை | நரிந்தர் சிங் |
வாழ்க்கை தொகு
மொகிந்தர் சிங் பாட்டியாலா சுதேச அரசின் அரசரான மகாராசா நரிந்திரர் சிங்கின் மகன் ஆவார். இவர் புல்கியன் வம்சத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும், 1862 ஆம் ஆண்டில் குழந்தையாக இருந்த போது இவர் அரியணை ஏறினார். எனவே இவர் 1870 ஆம் ஆண்டு வயது வரும் வரை மாநில ஆட்சி மன்றம் அரசாங்கத்தை நடத்தியது. சிர்கிந்து கால்வாய் திட்டம் இவரது ஆட்சியில் தான் அனுமதிக்கப்பட்டு முடிக்கப்பட்டது. அதன் கட்டுமான செலவிற்கு அரசு தனது பங்காக ஒரு கோடியே 20 லட்சத்தை வழங்கியது. மாணவர்களின் உயர்கல்வியினை மேம்படுத்துவதற்காக ஓர் அரண்மனை கட்டிடத்துடன் மொகிந்திரா கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது. இவரது ஆட்சியின் போது தான் பாட்டியாலா மற்றும் அம்பாலா இடையே தந்தி பாதையும் அமைக்கப்பட்டது.[1] 1870 ஆம் ஆண்டில் இவரது பிறந்தநாளில் இந்திய நட்சத்திர வரிசையின் மாபெரும் மாவீரத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.[2]
1876 ஆம் ஆண்டு மொகிந்தர் சிங் இறந்தார். இவருக்கு பிறகு இவருடைய இளம் மகன் ராசிந்தர் சிங் பாட்டியாலா சுதேச அரசின் அரசராகப் பதவி ஏற்றார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ Singh, Sardar Arjan Shah (1931). "Census Report of the Patiala State". Punjab State Gazetteer: xii. http://lsi.gov.in:8081/jspui/bitstream/123456789/7091/1/26736_1931_PAT.pdf.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).