பட்டியாலா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். பட்டியாலா இந்திய விடுதலைக்கு முன் பிரித்தானியர் ஆட்சிக்கு அடங்கிய மன்னர் ஆட்சிப் பகுதியாக விளங்கியது. பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் 29°49’, 30°47’ ஆகிய வட நிலநேர்க்கோடுகளுக்கு இடையிலும், 75°58’, 76°54' ஆகிய கிழக்கு நிலநிரைக்கோடுகளுக்கு இடையிலும் அமைந்துள்ளது. இதே பெயருள்ள பாட்டியாலா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமுமாகும். கிலா முபாரக் என்ற கோட்டையைச் சுற்றி இந்த நகரம் அமைந்துள்ளது. பழைய பஞ்சாப் மாகாணத்தில் சித்து வம்சத்தினரால் ஆளப்பட்ட பட்டியாலா அரசின் தலைநகராகவும் இருந்தது.

பாட்டியாலா
—  நகரம்  —
பாட்டியாலா
இருப்பிடம்: பாட்டியாலா , இந்தியா
அமைவிடம் 30°20′N 76°23′E / 30.34°N 76.38°E / 30.34; 76.38
நாடு  இந்தியா
மாநிலம் பஞ்சாப்
நிறுவப்பட்ட நாள் 1754
தலைநகரம் பாட்டியாலா
மிகப்பெரிய நகரம் பாட்டியாலா
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் பகவந்த் மான்[2]
மக்களவைத் தொகுதி பாட்டியாலா
மக்கள் தொகை

அடர்த்தி

13,54,686[3] (2011)

6,451/km2 (16,708/sq mi)

ம. வ. சு 
0.860 (மிக கூடுதலான
கல்வியறிவு 81.80% 
மொழிகள் பஞ்சாபி, இந்தி மற்றும் ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

210 சதுர கிலோமீட்டர்கள் (81 sq mi)

350 மீட்டர்கள் (1,150 அடி)

குறியீடுகள்
ஐ. எசு. ஓ.3166-2 IN-Pb
குறிப்புகள்
  • பாட்டியாலா நகரம் பாரம்பர்யமிக்க நகரத்தையும் சிற்றரசையும் உள்ளடக்கியது
இணையதளம் Patiala.nic.in/
பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங்

1763ஆம் ஆண்டு பாபா ஆலா சிங் என்ற படைத்தலைவரால் கட்டப்பட்டது. [4]பட்டியாலா என்பது பாபா ஆலா சிங்குக்கு உரித்தான பட்டி (நிலம்) என்னும் பொருள் கொண்டது.

இங்குள்ள மக்கள் அணியும் பாரம்பர்யமிக்க தலைப்பாக்கட்டு பரன்டா, சல்வார் (பெண்கள் அணியும் ஆடை), ஜூத்தி (ஒருவகை காலணி) ஆகியவை தனிப்பெருமை பெற்றவை. மதுவகைகளை அளக்கும் பாட்டியாலா அளவும் (பாட்டியாலா பெக்) தனிச்சிறப்பானது .[4]

இந்தியாவின் முதல் விண்ணோடி, ராகேஷ் சர்மா, பாட்டியாலாவில் பிறந்தவர்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. [1]
  4. 4.0 4.1 "History of Patiala". Official Website of District Patiala. பார்க்கப்பட்ட நாள் 2011-08-19.
  5. "U.S. and Russian Human Spaceflights, 1961-Sep. 30, 1995". NASA. பார்க்கப்பட்ட நாள் 2011-08-19.
  6. "Biographies of International Astronauts". SpaceFacts. பார்க்கப்பட்ட நாள் 2011-08-19.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பட்டியாலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டியாலா&oldid=3461413" இலிருந்து மீள்விக்கப்பட்டது