பாட்ரிசியா பாபிட்

கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்

பாட்ரிசியா கிளெமென்ட் பாபிட் (Patricia Clement Babbitt) அமெரிக்காவின் சான்பிரான்சிசுகோ நகரத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருந்தகப் பள்ளியில் பேராசிரியர் மற்றும் முதன்மை புலனாய்வாளராக இருந்தவர் ஆவார்</ref>[1][2][3][4].கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் ஆகிய துறைகளில் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக 2018 ஆம் ஆண்டு இவர் கணக்கீட்டு உயிரியல் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறைகளின் இயக்குநராகப் பணியாற்றினார். யூனிபிரோடு எனப்படும் கட்டற்ற அணுகல் தரவுத்தளம், மெட்டாசைக் எனப்படும் வளர்சிதை மாற்ற பாதை தரவுத்தளம், எச்.எச்.எம்.ஐ எனப்படும் அறிவியல் ஆய்வு வாரியம் மற்றும் பி.எல்.ஓ.எசு எனப்படும் இலாப நோக்கமற்ற கணக்கீட்டு உயிரியல் வெளியீட்டு நிறுவனத்தில் துணை ஆசிரியர் போன்ற பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் இவர் உறுப்பினராகப் பணியாற்றினார்.

பாட்ரிசியா பாபிட்
Patricia Babbitt
பிறப்புபாட்ரிசியா கிளமென்ட் பாபிட்
துறைஉயிர் தகவலியல்
கணக்கீட்டு உயிரியல்
பணியிடங்கள்சான்பிரான்சிசுகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கல்விசான்பிரான்சிசுகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
ஆய்வேடுகிரியேட்டின் கைனேசு வரிசை நிர்ணயம், வெளிப்பாடு மற்றும் தளம் - மரபணு மாற்றம் (1988)
ஆய்வு நெறியாளர்சியார்ச்சு எல்.கென்யன்
விருதுகள்அனைத்துலக சமூக கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் உறுப்பினர் (2018)
இணையதளம்
profiles.ucsf.edu/patricia.babbitt

கல்வி தொகு

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருந்தாக்க வேதியியல் துறையில் 1988 ஆம் ஆண்டு பாட்ரிசியா பாபிட் முனைவர் பட்டம் பெற்றார்[5].

மேற்கோள்கள் தொகு

  1. "Patricia Babbitt - UCSF Profiles". profiles.ucsf.edu.
  2. "Babbitt Lab Website". babbittlab.ucsf.edu. Archived from the original on 2017-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-07.
  3. Gerlt, John A.; Babbitt, Patricia C. (2001). "Divergent Evolution of Enzymatic Function: Mechanistically Diverse Superfamilies and Functionally Distinct Suprafamilies". Annual Review of Biochemistry 70 (1): 209–246. doi:10.1146/annurev.biochem.70.1.209. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-4154. பப்மெட்:11395407.  வார்ப்புரு:Closed access
  4. Radivojac, Predrag; Clark, Wyatt T; Oron, Tal Ronnen; Schnoes, Alexandra M; Wittkop, Tobias; Sokolov, Artem; Graim, Kiley; Funk, Christopher et al. (2013). "A large-scale evaluation of computational protein function prediction". Nature Methods 10 (3): 221–227. doi:10.1038/nmeth.2340. பன்னாட்டுத் தர தொடர் எண்:1548-7091. பப்மெட்:23353650.   
  5. "Patricia Babbett, PhD". UCSF Profiles.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்ரிசியா_பாபிட்&oldid=3562620" இலிருந்து மீள்விக்கப்பட்டது