பாணபட்டர் (Bāṇabhaṭṭa) (ஸம்ஸ்க்ருதம்: बाणभट्ट), பொ ஊ ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் சமஸ்கிருத மொழி இலக்கிய ஆசிரியரும், கவிஞரும் ஆவார்.

தானேசர் மற்றும் கன்னோசி தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை பொ ஊ 606 முதல் பொ ஊ 647 முடிய ஆண்ட பேரரசர் ஹர்ஷவர்தனரின் அரசவையில் பாணபட்டர் தலைமை அரசவைக் கவியாக இருந்தவர்.

பாணபட்டரின் முதன்மை எழுத்துக்களில் ஹர்ஷ சரித்திரம் (Harshacharita) என்ற நூல் மற்றும் ஹர்ஷரின் ஆட்சி முறைகள் (Deeds of Harsha) குறித்தான ஸம்ஸ்க்ருத நூல்கள் சிறப்பானதாகும். [1] உலகின் முதல் புதினம் என அழைக்கப்படும் காதம்பரி நூலை முடிப்பதற்குள் பாணபட்டர் மறைந்திடவே, அவரது மகன் பூஷணப்பட்டர் (Bhūṣaṇabhaţţa) என்பவர், காதம்பரி (Kadambari) காதல் புதினத்தை தொடர்ந்து எழுதி முழுமையாக்கி வெளியிட்டார். இந்த மூன்று நூல்களும் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.[2] பாணபட்டர் எழுதிய சண்டிகாஷ்டகம் மற்றும் பார்வதிபரிநயணம் (பார்வதி கல்யாணம்) நாடக நூலாகும்.

வாழ்க்கை தொகு

சித்திரபானு - இராஜதேவி இணையருக்கு, மகத நாட்டில் தற்கால பிகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தின் தலைமையிடமான சாப்ரா நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஹிரண்யவாகு ஆற்றாங்கரையில் அமைந்த பிரதிகூடம் எனும் கிராமத்தில் பிறந்தவர். பாணபட்டர் வாத்சாயனர் கோத்திரத்தில், போஜ குலத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஹர்சவர்தனரின் அழைப்பின் பேரில் தானேசர் நகரத்திற்குச் சென்றார்.

படைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sthanvishvara (historical region, India)". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  2. Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature: devraj to jyoti. Sahitya Akademi. பக். 1339–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1194-0. http://books.google.com/books?id=zB4n3MVozbUC&pg=PA1339. 

ஆதாரநூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணபட்டர்&oldid=3444287" இலிருந்து மீள்விக்கப்பட்டது