ஹர்ஷவர்தனர்
ஹர்ஷர் அல்லது ஹர்சவர்தனர் (हर्षवर्धन) (590–647) வட இந்தியாவை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு இந்தியப் பேரரசர். இவருடைய தந்தை பிராபாகரவர்தனர். இவருடைய அண்ணன் ராஜ்யவர்தனர் தானேஸ்வரத்தின் அரசர். இவர் தன் ஆட்சியின் உச்சத்தில் பஞ்சாப், வங்காளம், ஒரிசா, சிந்து கங்கைச் சமவெளி முழுவதையும் ஆண்டு வந்தார். தெற்கே நர்மதை நதி வரை இவருடைய ஆட்சி இருந்தது.[1][2]
ஹர்ஷவர்தனர் | |
---|---|
பேரரசர் ஹர்சவர்தனர் | |
ஆட்சிக்காலம் | கி பி 606 - 647 |
முன்னையவர் | இராச்சிய வர்தனர் |
பிறப்பு | 590 |
இறப்பு | 647 |
அரசமரபு | புஷ்யபூதி |
தந்தை | பிரபாகர வர்தனர் |
கி பி ஆறாம் ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியா முழுதும் குப்த பேரரசு வீழ்ச்சிக்குப்பின் சிறு சிறு குடியாட்சிகளாகவும் குறுநில மன்னராட்சிகளாகவும் இருந்து வந்தது. இந்தக் குறுநில மன்னர்கள் கி.பி 606 ஹர்ஷரை அவருடைய 16ஆவது வயதில் அரசராக முடிசூட்டினர்..[3] ஹர்ஷர் தனது பேரரசை மேற்கில் பஞ்சாப் முதல் கிழக்கில் வங்காளம் வரை விரிவு படுத்தினார்.
ஹர்சரின் மூதாதையர்
தொகுஹர்சரின் முன்னோர்களின் தோற்றம் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. இதனால் அவர்களுடைய வரலாறு தெளிவாக இல்லை. ஹர்சரின் அவையில் சமஸ்கிருதப் புலவராக இருந்த பாணபட்டர் (Banabhatta) என்பவருடைய கூற்றுப்படி, தானேசர் என்று இன்று வழங்கும், ஸ்தானேஸ்வர் என்னும் அரசை நிறுவி அதனை ஆண்டுவந்த புஷ்பபூதி என்பவனுடைய வழித்தோன்றலே ஹர்சா. தானேசுவரம் தொன்மையான இந்து யாத்திரை மையமும், 51 சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுமான இவ்விடம் இன்று அரியானா மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குருச்சேத்திரம் என்னும் நகருக்கு அண்மையில் ஒரு சிறு நகரமாக உள்ளது.
புஷ்பபூதி என்னும் பெயர் ஹர்சரின் முன்னோர்களைப் பற்றிய ஆய்வில் ஒரு முக்கிய சான்றாகக் கொள்ளப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள குண்டா என்னுமிடத்தில் காணப்பட்ட கி.பி 181 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் இது தொடர்பில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இக் கல்வெட்டு, ஹரியானாப் பகுதியை முன்னர் ஆண்டு வந்த யௌதேயர்களைத் தோற்கடித்த முதலாம் ருத்திரதாமன் என்பவனுடைய மரபில் வந்த முதலாம் ருத்திரசிம்மன் என்பவனுடைய தளபதியாக இருந்த ருத்திரபூதி என்பவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
புகழ் பெற்ற சீனப் பயணியான சுவான்சாங் என்பவர் ஹர்சா ஒரு வைசியன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவன் மரபின் தோற்றம் பற்றி எதுவும் கூறவில்லை. அக்காலத்து இந்தியச் சாதிகளைப் பற்றிய சிறப்பான அறிவைப் பெற்றிருந்தவரான சுவான்சாங், அரசர்கள் பொதுவாக சத்திரியர்கள் என்பதைத் தெளிவாகவே அறிந்திருந்தார் எனினும் ஹர்சாவை வைசியனாகக் குறிப்பிட்டிருப்பது இது வழமைக்கு மாறானது என்பதனாலாக இருக்கலாம். எனினும், முடிசூட்டு விழாவின்போது ஹர்சா ராஜபுத்திரன் என்னும் பட்டத்தை ஏற்றுக் கொண்டான்.
முடிசூட்டல்
தொகுகி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரவர்த்தனர் என்பவரால் இந்த வம்சம் நிறுவப்பட்டது, அவரை தொடர்ந்து ஆதித்யவர்த்தனரும்,பிரபாகவர்த்தனரும் ஆட்சி செய்தனர்,பிரபாகவர்த்தனரின் மறைவுக்கு பின்னர் இராஜ்ய வர்த்தனர் அரியனை ஏறினார்
ஹூனர்களை அடக்கி தானேசுவரத்தை கைபற்றினார், அதே சமயம் மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரி ராஜ்ஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயையும் தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்
அதை அறிந்த ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான். அதன் பின் சில சூழ்ச்சியால் ராஜ்யவர்தனர் சசாங்கனால் கொல்லப்பட்டான்
அப்போது ஹர்சருக்கு வயது பதினாறே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்; ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிதீர்த்து, தன் சகோதரி ராஜ்யஸ்ரீயையும் மீட்டான்.
ஆட்சி முறை
தொகுஅதுவரை தானேசுவரத்தை தலைநகராக கொண்டு தான் அனைவரும் ஆட்சி செய்து வந்தனர்,ஆனால் ஹர்சர் கன்னோசியையும் அதனுடன் இனைத்து மாபெறும் சாம்ராச்சியத்தை உருவாக்களானார்
மிகப்பெரிய பேரரசு பரந்து விரிந்திருந்ததனால்,ஆட்சி செய்ய கடினமாய் இருந்தது,அதனால் சிற்றரசர்களை அச்சுறுத்தவும், உள்நாட்டுக் குழப்பங்களை தீர்க்கவும் ஒரு மிகப் பெரிய படையை 60,000 யானைகளையும், 1,00,000 குதிரைகளையும் வாங்கி உருவாக்கலானான் என்று குறிப்புகளில் உள்ளது
படைபலம் மட்டுமன்றி நட்பையும் பெருக்கலானார், அசாம் நாட்டு மன்னன் பாஸ்கர வர்மனிடம் தீவிர நட்பு பாராட்டலானார்.
அது மட்டுமன்றி அண்டை தேசங்களுடன் நட்பு பாராட்டி வாணிபத்தைப் பெருக்க முயன்றார், அதற்கு சீன தேசத்திற்கு தன் தூதுவரை அனுப்பி நட்பு பாராட்டினார் ஹர்சர்
மாநிலங்கள் புக்திகள் என்று அழைக்கப்பட்டன, புக்திகள் விஷயம் அல்லது மாவட்டங்களாக பிரித்து நிர்வாகம் செய்தான்[சான்று தேவை].
ஹர்சரின் சமயம்
தொகுதொடக்கத்தில் தீவிர சிவபக்தராக இருந்தவர் ஹர்சர் என்றும், யுவான் சுவாங் தெரிவித்த புத்த மத கொள்கைகளாலும், சகோதரி ராஜ்யஸ்ரீயாலும் இவர் புத்த மதத்தைத் தழுவலானார்
புத்த சமயத்தை இவர் தழுவினாரே அன்றி ஏனைய சமய மக்களையும் கனிவோடு கவனித்தார், கட்டாய மதமாற்றம் போன்றவைகளை வெறுத்தார்
தலைநகர் கன்னோசி
தொகுவடஇந்தியாவின் முக்கிய நகரமாகி புத்தர் காலத்து பாடலிபுத்திரத்தின் இடத்தை பிடித்தது ஹர்சரின் தலைநகர் கன்னோசி, 10,000 க்கும் மேற்பட்ட இரு புத்த சமய துறவிகள் இங்கு வாழ்ந்து வந்தனர்
பிற மத கோவில்களும் இருநூற்றுக்கும் மேல் இருந்ததாகவும் தெரிகிறது, நன்கு திட்டமிடப்பட்ட வீதிகளும்,பூங்காக்களும்,புத்த மடங்களும் கன்னோசியை அலங்கரித்தது
யுவான் சுவாங்கும் நாலந்தா பல்கலைகழகமும்
தொகுஹர்சர் சீனாவடன் நெருங்கிய நட்பு பூண்டமையால்,சீன நாட்டு யுவான் சுவாங்கை வரவேற்று உபசரித்தார், யுவானுக்கு ஹர்சரின் ஆட்சி முறையும் போர் திறமையும் மிகவும் பிடித்து விட்டது
ஹர்சரின் காலத்தில் மிகப்பெரும் தொகை மானியமாக நாலந்தா பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்தது
பல்கலையின் உயர்ந்த கட்டிடங்கள்,போதனா முறைகள் ஆகியன புத்த சமயத்திற்கே உரித்தான புகழாகும்
ஹர்சர் காலத்து இலக்கியம்
தொகுஹர்ச சரிதத்தையும் காதம்பரி போன்ற அற்புத நூல்களை படைத்த பாணபட்டர் ஹர்சரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இவரின் இலக்கிய ஆர்வம் இதிலிருந்தே தெரிகிறது
மேலும் ஹர்சரே ஒரு சிறந்த நாடகாசிரியர் ஆவார்; நாகானந்தம், பிரியதர்ஷிகா, இரத்தினாவலி ஆகியன இவரே எழுதிய நாடகங்கள்
நாடக ஆசிரியர்
தொகுஇவர் நாகானந்தம், ரத்னாவளீ, ப்ரியதர்சிகா என்ற மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றியுள்ளார். இவை மன்னரின் அவைப் புலவர்களான பாணபட்டர் முதலியோரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு கருத்து உண்டு. இந்த நாடகங்களுக்கு சமசுகிருத இலக்கியத்தில் முக்கியப்பங்கு உண்டு. 12-வது நூற்றாண்டில் இருந்த ஸ்ரீஹர்ஷர் (நைஷதம்[4] என்ற பெருங்காப்பியத்தை இயற்றியவர்) வேறு, இவர் வேறு.
மறைவும் பேரரசின் சிதைவும்
தொகுநாற்பதாண்டு காலம் மிகப் பெரிய சாம்ராச்சியத்தை நடத்திய ஹர்சவர்த்தனர் கி.பி 647 வாக்கில் மறைந்தார் என தெரிகிறது
ஹர்சரின் மறைவுக்கு பிறகு அவருக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் தங்கள் எல்லைகளைப் பெருக்கி கொண்டனர், அசாம் மன்னன் பாஸ்கர வர்மனும் நகரங்களைப் பிடித்துக் கொண்டான், இதனால் மிகப்பெரிய சாம்ராச்சியம் முடிவுக்கு வந்தது
குறிப்புகள் :
ஹர்சரை பற்றிய குறிப்புகள் பாணரின் ஹர்சசரிதத்திலும், யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளான சியூக்கியிலும் கிடைக்கப் பெற்றவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Harsha, Indian emperor
- ↑ [ http://www.ancient.eu/Harsha/ Harsha]
- ↑ RN Kundra & SS Bawa, History of Ancient and Meddieval India
- ↑ Naishadha Charita