முதன்மை பட்டியைத் திறக்கவும்

கன்னோசி

(கன்னௌசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கன்னௌசி அல்லது கனௌச் அல்லது கன்னோசி (Kannauj) (இந்தி: कन्नौज), (formerly known in English as 'Cannodge'), வட இந்தியாவின், உத்தரப் பிரதேசம் மாநிலம், கன்னாஜ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும், நகர் மன்றமாகவும் உள்ளது. பண்டைய பாஞ்சால நாட்டின் தென் பகுதிக்கு, கன்னோஜ் என்ற கன்யாகுப்ஜம் தலைநகராக இருந்தது.[1] கன்னௌசி நகரத்தை தலைநகராகக் கொண்டு பேரரசர் ஹர்ஷவர்தனர் வட இந்தியாவை ஆண்டார். மேலும் பல வட இந்திய மன்னர்களின் அரசின் தலைநகராக கன்னௌசி விளங்கியது.

கன்னோசி
நகரம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Uttar Pradesh" does not exist.
ஆள்கூறுகள்: 27°04′N 79°55′E / 27.07°N 79.92°E / 27.07; 79.92ஆள்கூறுகள்: 27°04′N 79°55′E / 27.07°N 79.92°E / 27.07; 79.92
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கன்னோஜ்
ஏற்றம்139
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்84
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி & உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்209725
வாகனப் பதிவுUP-74
இணையதளம்www.kannauj.nic.in

1018இல் கஜினி முகமது கன்னௌசி நகரை வென்றார். கஹாத்வால குலத்தை நிறுவிய சந்திர தேவ மன்னர், 1090இல் கன்னௌசியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்.

இவனின் பேரன் கோவிந்தசந்திரன் கன்னோசியை உச்சியின் புகழுக்கு கொண்டு சென்றார். கோரி முகமது, 1193இல் கன்னோசியின் ஜெயச்சந்திரனை கொன்றார். தில்லி சுல்தான் இல்ட்டுமிஷ் கன்னோசியை வென்றதன் மூலம் கன்னோசியின் புகழ் வீழ்ந்தது.[2]:21,32-33

அமைவிடம்தொகு

கான்பூர் நகரத்திலிருந்து 80 கி. மீ தொலைவிலும், லக்னோ நகரத்திலிருந்து 120 தொலைவிலும், புதுதில்லியிலிருந்து 353 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகைதொகு

25 நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கொண்ட கன்னோசி நகரத்தின், 2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 84,862 ஆகும். அதில் ஆண்கள் 44,880 ஆகவும்; பெண்கள் 39,982 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 11,881 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 891 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 71.92% ஆகவுள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ. பக். 2. ISBN 978-81-208-0404-3, ISBN 978-81-208-0404-3. http://books.google.co.in/books?id=2Tnh2QjGhMQC&pg=PA2&dq. 
  2. Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, ISBN 9789380607344
  3. Kannauj Population Census 2011

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னோசி&oldid=2696527" இருந்து மீள்விக்கப்பட்டது