தானேசர்
தானேசர் அல்லது தானேஸ்வரம் என்பது, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள காகர் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரம் ஆகும். இது டில்லியிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் குருச்சேத்திரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற பேரரசனான ஹர்சவர்த்தனுடைய தந்தையான பிரபாகர்வர்த்தன் வர்த்த மரபை நிறுவித் ஸ்தானேஸ்வர் என அன்று அழைக்கப்பட்ட இன்றைய தானேசரில் இருந்து ஆட்சி செய்தான்.
தானேசர் | |
— நகரம் — | |
அமைவிடம் | 29°59′N 76°49′E / 29.98°N 76.82°Eஆள்கூறுகள்: 29°59′N 76°49′E / 29.98°N 76.82°E |
நாடு | ![]() |
மாநிலம் | ஹரியானா |
மாவட்டம் | குருக்சேத்திரா மாவட்டம் |
ஆளுநர் | காப்தன் சிங் சோலங்கி |
முதலமைச்சர் | மனோகர் லால் கட்டார் |
மக்களவைத் தொகுதி | தானேசர் |
மக்கள் தொகை | 120,072 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 232 மீட்டர்கள் (761 ft) |
1950 ஆம் ஆண்டு வரை இது அதிகம் அறியப்படாத நகரமாக இருந்தது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பெருமளவில் இடம்பெற்ற மக்கள் இடப் பெயர்வுகளைத் தொடர்ந்து, இப்பகுதியில் ஒரு பெரிய அகதிகள் முகாம் நிறுவப்பட்டது. இதன் பின் தானேசர் ஒரு வணிக நகரமாக உருப்பெற்றது. இப்பகுதி பெர்மளவில் வளர்ச்சியடைந்த காரணத்தால், தானேசரையும் உள்ளடக்கிப் புதிய மாவட்டமான குருச்சேத்திரா 1973 ஆம் ஆண்டில் உருவானது. இதன் முக்கிய நகரமாகத் தானேசர் விளங்குகிறது.