பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் அறிவுடைநம்பி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவன் தன் குடிமக்களை வருத்தி வரி வாங்கியிருக்கிறான். புலவர் பிசிராந்தையார் இவனை நேரில் கண்டு பக்குவமாக எடுத்துக் கூறித் திருத்தியிருக்கிறார்.

வயலில் விளைந்த நெல்லை அறுத்து அடித்துக் குற்றி அரிசியாக்கிப் பொங்கிக் கவளமாக்கி யானைக்கு ஊட்டினால் விளைந்த நெல் பல நாட்களுக்கு உதவும். இதே விளைச்சல் வயலில் யானை மேய்ந்தால் அது உண்ணுவதை விட, அதன் காலால் மிதிபட்டு அழிவது மிகுதியாகும். எனவே அரசன் குடிமக்களிடம் விளைச்சலில் புகுந்த யானை போல் வரி தண்டக்கூடாது என எடுத்துரைத்தார். [1] அரசன் திருந்தினான்.

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 184.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியன்_அறிவுடைநம்பி&oldid=1259649" இலிருந்து மீள்விக்கப்பட்டது