பண்டு மொழிகள்

(பாண்டு மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பண்டு மொழிகள் நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளின் குழுமம் ஆகும். உண்மையில் பண்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பண்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே கணக்கீட்டின்படி, பான்டோயிட் குழுமத்தில் 681 மொழிகளும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில் 1514 மொழிகளும் உள்ளன[1].

பான்டு மற்றும் ஏனைய நைகர்-கொங்கோ மொழிகளின் புவியியற் பரவலைக் காட்டும் நிலப்படம்.
பண்டு மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bnt
ISO 639-3
படிமம்:Map of African language families ca.svg, Bantu area.png

பண்டு மொழிகள் தற்கால நைஜீரியாவுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, மத்திய ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பண்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.

பண்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக் (1827-1875) என்பவராவார். இது மக்கள் என்னும் பொருள் தருவது.

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 2007-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டு_மொழிகள்&oldid=3561690" இலிருந்து மீள்விக்கப்பட்டது