பாதர் விரைவு இரயில்
லாகூருக்கும் பைசலாபாத்துக்கும் இடையில் ஓடும் பயணிகள் இரயில்
பாதர் விரைவு இரயில் (Badar Express) லாகூருக்கும் பைசலாபாத்துக்கும்[1] இடையில் செல்லும் பயணிகள் இரயில் ஆகும். பாக்கித்தான் இரயில்வே நிர்வாகம் இந்த பயணிகள் இரயிலை இயக்குகிறது. இரு நகரங்களுக்கிடையிலான 140 கிலோமீட்டர் (87மைல்) தொலைவை இந்த இரயில் தோராயமாக 2 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. பாக்கித்தானின் பிரதானமான இரயில் வழித்தடங்களில் ஒன்றான கராச்சி-பெசாவர் இரயில் பாதை, சாக்தாரா பாக் – சாங்லா மலை கிளைப்பாதை, கானேவால்-வாசிராபாத் நீட்சிப் பாதைகளில் பாதர் விரைவு இரயில் பயணம் செய்கிறது.
பாதர் விரைவு இரயில் Badar Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | நகரங்களிடை இரயில் |
முதல் சேவை | 1986 |
நடத்துனர்(கள்) | பாக்கித்தான் இரயில்வே |
வழி | |
தொடக்கம் | லாகூர் சந்திப்பு |
முடிவு | பைசலாபாத் சந்திப்பு |
ஓடும் தூரம் | 140 கிலோமீட்டர் |
சராசரி பயண நேரம் | 2 மணி, 15 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | தினசரி |
தொடருந்தின் இலக்கம் | 111யுபி (லாகூர்→பைசலாபாத்) 112டி என் (பைசலாபாத்→லாகூர்) |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | சிக்கனம் |
படுக்கை வசதி | இல்லை |
உணவு வசதிகள் | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | 1676 மி.மீ |
பாதை உரிமையாளர் | பாக்கித்தான் இரயில்வே |
பாதை
தொகு- லாகூர் சந்திப்பு-சாக்தாரா பாக் சந்திப்பு : வழி: கராச்சி-பெசாவர் இரயில் பாதை '
- சாக்தாரா பாக் சந்திப்பு-சாங்லா மலை சந்திப்பு: வழி: சாக்தாரா பாக் சந்திப்பு-சாங்லா மலை கிளை பாதை'
- சாங்லா மலை சந்திப்பு-பைசலாபாத் சந்திப்பு, வழி: கானேவால்-வாசிராபாத் கிளை பாதை
நிறுத்தங்கள்
தொகு- லாகூர் சந்திப்பு
- குயிலா சேக்புரா
- பாருக் அபாத்
- பாகாலைக்
- சாப்தராபாத்
- சாங்லா மலை சந்திப்பு
- சாக் சும்ரா சந்திப்பு
- பைசலாபாத் [2]
வசதிகள்
தொகுசிக்கனக் கட்டணச் சேவையாக இப்பயணிகள் இரயில் இயக்கப்படுகிறது >.
மேற்கோள்கள்
தொகு- ↑ IRFCA: Pakistan Railway Train Names Author: Owais Mughal, Retrieved on 1 July 2013
- ↑ Pakistan Railways official website, Badar Express Timings பரணிடப்பட்டது 2018-11-15 at the வந்தவழி இயந்திரம், Retrieved on 23 October 2012