பாதோ திருவிழா
பாதோ திருவிழா ( அசாமிய மொழி: বাথৌ পূজা)) [1] என்பது இந்தியாவின் அசாமின் போடோ - கச்சாரிகளின் முக்கியமான மத விழாவாகும். இந்த திருவிழாவில், மக்கள் கிலா டம்ரா, குரியா பிராய், ஸ்ரீ பிராய் (ஷிப் ப்ராய்), பாதோ பிராய் போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்பட்ட கடவுளை வணங்குகிறார்கள். இந்த திருவிழா கர்ஜா, கெராய் மற்றும் மராய் போன்ற வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைகளில் கெராய் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
கெராய் திருவிழா
தொகுஇந்த திருவிழாவிற்கு முன்பு கர்ஜாவின் மத சடங்குகள் செய்யப்படுகின்றன. அதன்பின்னர் போடோ கிராமவாசிகள் கெராய் பூஜை செய்ய ஒரு தேதியினை நிர்ணயிக்கப்படுகிறனர். இந்தத் திருவிழாவின் போது அவர்கள் தெய்வமாக கருதும் பராய் பதோ என்ற கற்றாழைக்கு பூக்கள், பழங்கள் மற்றும் சில தானியங்கள் போன்றவறை வழங்குகின்றனர். சிறப்பு புல் வகை, மா இலைகள் மற்றும் துளசி இலைகள் போன்ற பல்வேறு இலைகளும் ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து தண்ணீருடன் சேர்த்து வைக்கப்படுகின்றன.
சான்றுகள்
தொகு- ↑ "MP Biswajit Daimary graces 'Bathow Puja' at Baksa - INSIDENE" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
வெளி இணைப்புகள்
தொகு- 'கெராய் ஒரு மத விழா', assamtribune.com.