பாத்திமத் நகுலா

மாலைத்தீவின் திரைப்பட இயக்குநர்

பாத்திமத் நகுலா (Fathimath Nahula)(பிறப்பு 22 ஜூன் 1973) ஓர் மாலைத்தீவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாவார்.

பாத்திமத் நகுலா
விருது வழங்கும் ஒரு நிகச்சியில் நகுலா
மாலைத்தீவின் முதல் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் நகுலா, 2011
பிறப்பு22 சூன் 1973 (1973-06-22) (அகவை 51)
பணிஇயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1991 இல், நகுலா, ஜமாலுதீன் பள்ளியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] அந்த நேரத்தில், இவர் தனது பெரும்பாலான நேரத்தை கதைகள் எழுதுவதிலும் அதை வளர்ப்பதிலும் செலவிட்டார்.[1] பின்னர் இவர் மாலைத்தீவு தொலைக்காட்சி தயாரித்த பல திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் உரையாடல்களையும், கதைகளையும் எழுதினார். அதே நேரத்தில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் உட்பட பல்வேறு தளங்களில் சிலவற்றையும் வெளியிட்டார்.[1] வெள்ளைத்தாளில் தான் எழுதும் உண்மையான உணர்ச்சிகளை திரைப்படத்தில் கொண்டுவர திரைப்படங்களை இயக்க அதை ஓர் தொழிலகத் தொடர முடிவு செய்தார்.[1]

தொழில்

தொகு

1998-2009: ஆரம்ப வெளியீடுகள்

தொகு

இவர், அப்துல்லா சுஜோ என்பவரின் இயக்கத்தில் வெளியான லைலா (1997) என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக திரைப்படத் துறையில் நுழைந்தார். இது இவர் முன்பு எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் படத்தின் திரைக்கதையானது இயக்குனர் அப்துல்லா சுஜோவின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.[2] அந்த ஆண்டில், திரைக்கதைத் துறையில் இவருக்கு தேசிய அங்கீகார விருது கிடைத்தது.[1] பின்னர் இவர் சொந்தமாக படத்தை இயக்க ஆரம்பித்தார். குடும்ப நாடகமான பஹுனேவா (1998), இது ஒரு முக்கிய மேடை நடிகருக்கும் காது கேளாத-ஊனமான ஏழைப் பெண்ணுக்கும் இடையே ஒரு மனிதனின் காதல் மோதலை சித்தரிக்கிறது. உசைன் சோபா, மரியம் நிஷா , ஜம்ஷீதா அகமது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது . மேலும், திரையரங்கில் வணிகரீதியான "வெற்றி" என்று அறிவிக்கப்பட்டது.[3] இவரது முதல் இரண்டு படங்கள் வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டாலும் இவரது அடுத்த சில வெளியீடுகள் மாபா என்ற நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டன.[4]

பின்னர் 2010இல், இவர் எழுதி, யூசுப் சபியூவின் இயக்கத்தில் வீரானா என்ற நாடகத் திரைப்படம் வெளியானது. இதில் இவர், சிறுவர்களுடனான பாலியல் துன்புறுத்தலை கையாண்டார்.[5] சப்யு, நியுமா முகமது, அமிரா இஸ்மாயில் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. எழுத்தாளருக்கும், இயக்குநருக்கும் பாராட்டு கிடைத்தது.[5] வெளியீட்டிற்கு முன்பே ஒரு வலுவான சலசலப்பு இருந்ததால், இந்த படம் வணிக ரீதியான வெற்றி என்று நிரூபிக்கப்பட்டது.[6]

இவரது அடுத்த தயாரிப்பான ரவீ ஃபாரூக் இயக்கிய காதல் நாடகத் திரைப்படம் மிஹாசின் ஃபுரானா தந்தேன் (2012), இதில் நிமா முகமது, முகமது மாணிக் மற்றும் அலி சீசன் ஆகியோர் நடித்திருந்தனர்.[7]

மூன்றாவது மாலைத்தீவு திரைப்பட விருதுகளில், நகுலா சிறந்த திரைக்கதைக்காகவும், சிறந்த ஆடை வடிவமைப்பிற்காகவுமான பரிந்துரையைப் பெற்றார்.[8]

திரையுலகம்

தொகு

2018ஆம் நடந்த மாலைத்தீவு குடியரசுத் தலைவர் தேர்தல் காரணமாக அந்த ஆண்டு மாலைத்தீவு திரைப்படத் தொழிலுக்கு ஒரு மந்தமான ஆண்டாக இருந்தது. ஆண்டின் ஒரே வெளியீடு மாலைத்தீவின் முதல் வலைத் தொடர், காதல் நாடகம், ஹுவா என்பது மட்டுமே வெளியானது . [9] அறுபது அத்தியாயங்களைக் கொண்ட இது ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை மையமாகக் கொண்டது. குடும்பம் ஒரு சோகமான சம்பவத்திற்குப் பிறகு விரக்தியடைந்து துண்டுகளாக உடைந்து விடுகிறது. [10] [11] இது வெளியான நேரத்தில் 16,000க்கும் அதிகமான பயனர்களால் பார்க்கப்பட்டது. மேலும், வெற்றிகரமாக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. [12] [13]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "National Award of Recognition 1998 - Fathimath Nahula" (in dv) இம் மூலத்தில் இருந்து 31 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190131181103/http://inaamu.presidencymaldives.gov.mv/Index.aspx?lid=177&wid=940. 
  2. "Gaumee Inaam 2009 - Fathimath Nahula" (in dv). Presidency Maldives இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181203081921/http://inaamu.presidencymaldives.gov.mv/Index.aspx?lid=177&wid=186. 
  3. "Nahula Vs Tedry: Who among the two brought a revelation to Maldivian Cinema?" (in dv). Avas. https://avas.mv/7801. 
  4. "Nahula at her peak; aiming for 50 shows" (in dv). Avas. https://avas.mv/24768. 
  5. 5.0 5.1 "Veeraana did a satisfactory business at box office" (in dv). Haveeru இம் மூலத்தில் இருந்து 19 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100619204728/http://www.haveeru.com.mv/?page=listcategory&cat=ihUfinum. 
  6. "Prior its release, seven shows of Veeraan booked housefull" (in dv). Haveeru இம் மூலத்தில் இருந்து 16 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100516111848/http://www.haveeru.com.mv/?page=listcategory&cat=ihUfinum. 
  7. "Rav's "Mihashin Furaana Dhandhen" attracts Nahu's audience" (in dv). Haveeru இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111126232815/http://www.haveeru.com.mv/dhivehi/entertainment/111985. 
  8. "Maldives Film Awards Nominations out" (in dv). Haveeru இம் மூலத்தில் இருந்து 5 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150405165421/http://www.haveeru.com.mv/dhivehi/entertainment/153617. 
  9. "Huvaa: Nahula starts her web-series". 27 February 2018. https://mihaaru.com/entertainment/31773. பார்த்த நாள்: 30 November 2018. 
  10. ""Huvaa" is a hard work, it will be nice!". 18 October 2018. http://sun.mv/110406. பார்த்த நாள்: 30 November 2018. 
  11. ""Huvaa" can be viewed through Baiskoafu application". 7 October 2018. https://mihaaru.com/entertainment/43404. பார்த்த நாள்: 30 November 2018. 
  12. "Nahula's "Huvaa" to be released for streaming tomorrow". 28 November 2018. http://sun.mv/111524. பார்த்த நாள்: 30 November 2018. 
  13. "First episode of "Huvaa" was a success". 30 November 2018. http://sun.mv/112336. பார்த்த நாள்: 30 November 2018. 

வெளி இணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பாத்திமத் நகுலா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமத்_நகுலா&oldid=3383823" இலிருந்து மீள்விக்கப்பட்டது