பாத்திமா அல்-பிஹ்ரி

பாத்திமா பின்த் முஹம்மது அல்-ஃபிஹ்ரியா அல்-குராஷியா சுருக்கமாக பாத்திமா அல்-பிஹ்ரி ( Fatima al-Fihri - அரபு: فاطمة بنت محمد الفهرية القرشية) ஒரு அரபு பெண், உலகின் மிகப் பழமையானதானதும், தொடர்ந்து இயங்கிவரும் மற்றும் பட்டம் வழங்கும் வழக்கத்தினை முதலில் நிறுவிய பெருமைக்குரியவர். இவர் பொது வருடம் 859 இல் மொராக்கோவின் ஃபெஸ் நகரில் உருவாக்கிய அல்-கராவியீன் பல்கலைக்கழகம் தான் ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும் [1]

தற்போதைய துனீசியாவில் இருக்கும் கைரோவான் என்ற இடத்தில் கிபி 800 கால அளவில் ஃபாத்திமா பிறந்தார். இவர் அரபுக் குறைஷி வம்சத்தில் வந்ததால் ’‘அல் குறைஷிய்யா” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார். கைரோவானிலிருந்து தற்பொழுது மொரோக்கோவில் இருக்கும் ஃபெஸ் என்ற நகருக்கு அவரது குடும்பம் புலம் பெயர்ந்தது. அவருடைய தந்தை முஹம்மத் அல் ஃபிஹ்ரி கடுமையான உழைப்பின் மூலம் செல்வந்த வணிகர் ஆனவர். ஃபாத்திமாவும் அவருடைய சகோதரி மரியமும் நன்றாகப் படித்தனர். இஸ்லாமியப் பாடங்களையும் அதன் சட்டங்களையும் (ஃபிக்ஹ் கலையையும்), ஹதீஸ் கலையையும் கற்றுத் தேர்ந்தனர்.[2]


மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_அல்-பிஹ்ரி&oldid=3002140" இருந்து மீள்விக்கப்பட்டது