பாத்ஷாஹி நினைவு மண்டபம்

பாத்ஷாஹி நினைவு மண்டபம் ( Badshahi Ashurkhana ) ன்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாகும். இது இமாம் உசேனின் தியாகத்தின் நினைவாக கட்டப்பட்டது. இது முஃகர்ரமின் துக்க காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. [1]

பாத்ஷாஹி நினைவு மண்டபம்
உள்ளூர் பெயர்
அஷூர்கானா
பாத்ஷாஹி நினைவு மண்டபம்
அமைவிடம்ஐதராபாத்து, இந்தியா
கட்டப்பட்டது1594

அஷுர்கானா, இமாம்பர்கா அல்லது இமாம்பரா என்றும் அழைக்கப்படும் இது சியா முஸ்லிம்களின் நினைவு விழாக்களுக்கான ஒரு சபை மண்டபமாகும். குறிப்பாக முஃகர்ரம் துக்கத்துடன் தொடர்புடையது.[2] இதன் பெயர் முகம்மது நபியின் பேரனான உசேன் இப்னு அலி என்பவரிடமிருந்து பெறப்பட்டது.[3]

இது இப்போது ஒரு பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மூதாதையரின் பரம்பரை முத்தவல்லி முஜாவர் மிர் நவாஜிஷ் அலி மூஸ்வி 11 தலைமுறை பாதுகாவலராக இருக்கிறார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

இது சார்மினார் கட்டிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1594இல் முஹம்மது குலி குதுப் ஷா அவர்களால் கட்டப்பட்டது.  1611ஆம் ஆண்டில் அப்துல்லா குதுப் ஷாவின் கீழ் அற்புதமான வண்ண ஓடு-மொசைக் அலங்காரம் முடிக்கப்பட்டது. அதேசமயம், 1764ஆம் ஆண்டில் இரண்டாம் நிசாம் அலி கான் என்பவரால் மரக் கொலோனேடுகள், வெளிப்புற அரங்குகள், நுழைவு வாயில்கள் ஆகியன சேர்க்கப்பட்டன. [4]

நினைவுச்சின்னம்

தொகு

இங்கு நியாஸ் கானா (பிரசாதம் வழங்கும் இடம்), நகார் கானா (முரசு இசைக்குமிடம்), சராய் கானா ( பக்தர்கள் ஓய்வெடுக்குமிடம் ) அப்தார் கானா (குடிநீர் வழம்க்குமிடம்), லங்கர் கானா (உணவு பரிமாறும் இடம்), மாகன்-இ-முஜாவர் ( முஜாவர் குடியிருப்பு), தப்தார்-இ-முஜாவர் (முஜாவர் அலுவலகம்), அலவா சபுத்ரா, காவலர் அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பளபளப்பான மற்றும் துடிப்பான வண்ணங்களைத் தக்கவைத்துள்ள பற்சிப்பி ஓடுகளுடன் இன்றும் நிற்கிறது. அறுகோணங்களில் உள்ள சிக்கலான வடிவமைப்பு நேர்த்தியானக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Badshahi Ashurkhana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains of the City and Suburbs of Hyderabad. 1992.
  2. Juan Eduardo Campo (1 January 2009). Encyclopedia of Islam. Infobase Publishing. pp. 318–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-2696-8.
  3. Marafi, Najebah (29 September 2012). The Intertwined Conflict: The Difference Between Culture and Religion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1477128367.
  4. "Heritage Walk in Hyderabad – Badshahi Ashurkhana".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்ஷாஹி_நினைவு_மண்டபம்&oldid=3156850" இலிருந்து மீள்விக்கப்பட்டது