பானாதெனாய்க் விளையாட்டரங்கம்

கிரேக்க விளையாட்டரங்கம்

பானாதெனாய்க் விளையாட்டரங்கம் கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் உள்ள விளையாட்டரங்கமாகும். உலகிலேயே பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட ஒரே விளையாட்டரங்கமாகும்.[1]

பானாதெனாய்க் விளையாட்டரங்கம்

அமைப்பு

தொகு

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விளையாட்டரங்கை லைக்கோர்கஸ் நிறுவினார். ஹெராடஸ் ஆட்டிகஸ் என்பவர் மார்பிள் கற்களால் விளையாட்டரங்கை புதுப்பித்தார். 1896 ஆம் ஆண்டு அனஸ்டாசிஸ் மெடசெஸ் என்பவர் விளையாட்டரங்கை புதுப்பித்தார்.

பானாதெனாய்க் விளையாட்டுக்கள்

தொகு

பானாதெனாய்க் விளையாட்டரங்கில் விளையாட்டுக்கள் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கி.மு.566 முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரை நடத்தப்பட்டது. இந்த விழாவில் சமய விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தடகள் போட்டிகள் நடத்த்படும்

ஒலிம்பிக் போட்டிகள்

தொகு

1870, 1875, 1896, 1906, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இந்த விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Darling 2004, ப. 135.