பான்ஸ்வாரா

பான்ஸ்வாரா, இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் உள்ள பான்ஸ்வாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு தெற்கே 506.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; அகமதாபாத்திற்கு வடகிழக்கே 255.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட பன்ஸ்வாரா நகரத்தின் மக்கள் தொகை 101,017 ஆகும். அதில் ஆண்கள் 51,585 மற்றும் பெண்கள் 49,432 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12,274 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.72% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 64.83%, இசுலாமியர் 26.32%, பௌத்தர்கள் , சமணர்கள் 6.73%, சீக்கியர்கள் 0.21%, கிறித்தவர்கள் 1.13% மற்றும் பிறர் 0.76% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்ஸ்வாரா&oldid=3618099" இலிருந்து மீள்விக்கப்பட்டது