பான் (திரைப்படம்)
பான் (Fan, ஃபான்) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்திய இந்தி மொழி திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் ஷாருக்கான் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். மனேஸ் சர்மா இயக்கிய இத்திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரித்தார். இப்படத்தின் பாடல்களுக்கு இசையை விஷால்-சேகரும் பின்னணி இசையை ஆண்ட்ரியா குயிராவும் அமைத்து உள்ளனர். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இப்படம் 15 ஏப்ரல் 2016 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]
பான் Fan | |
---|---|
இயக்கம் | மனேஸ் சர்மா |
தயாரிப்பு | ஆதித்யா சோப்ரா |
கதை | மனேஸ் சர்மா |
இசை | விஷால்-சேகர் |
நடிப்பு | சாருக் கான் |
ஒளிப்பதிவு | மனு ஆனந்த் |
விநியோகம் | யாஷ் ராஜ் பிலிம்ஸ் |
வெளியீடு | 15 ஏப்ரல் 2016 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹1.05 பில்லியன் (US$16 மில்லியன்) |
கதை
தொகுபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆரிய கன்னாவின் (ஷாருக்கான்) தீவிர ரசிகன் கௌரவ் (ஷாருக்கான்) ஒரு நடுத்தர வர்க்க டில்லி சிறுவன். ஆரிய கன்னாவின் தோற்றத்தை கொண்ட கௌரவ் ஒரு விழாவில் நடிகர் ஆர்யனாக தோன்றி முதல்பரிசு வென்று அந்தப் பரிசுடன் ஆர்யனை சந்திக்கச் செல்கிறான். ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் சந்திக்க முடியாமல் கோபத்துடன் போகிறான். ஒரு நாள் போலீசில் சிக்கிய கௌரவை சந்திக்க ஆரிய கன்னா வருகிறார். அங்கே உங்களுடைய ரசிகனுக்காக 5 நிமிடம்கூட உங்களால் ஒதுக்க முடியாதா என்று கேட்க இது எனது வாழ்கை உனக்காக 5 விநாடி கூட ஒதுக்க முடியாது, நீ உன் குடும்பத்தை கவனி என்கிறார் ஆரிய கன்னா. இவ்வளவு நாளாக தீவிர ரசிகனாய் இருந்தவன் தீவிர எதிரியாக மாறுகிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.
நடிகர்கள்
தொகு- ஷாருக்கான் (இரட்டை வேடத்தில்)
- வாலுச்ச டி சுசா
- சயனி குப்தா
- ஷ்ரியா பில்கோங்கர்
- தீபிகா அமின்
- யோகேந்திரா திக்கு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Watch: Shah Rukh Khan in Fan's new song Jabra Fan". தி டெக்கன் குரோனிக்கள். 16 பெப்பிரவரி 2016. Archived from the original on 26 பெப்பிரவரி 2016.
- ↑ Hungama, Bollywood (15 ஏப்பிரல் 2016). "Fan Cast & Crew – Bollywood Hungama". Bollywood Hungama. Archived from the original on 1 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்பிரவரி 2018.
- ↑ "FAN (12A)". British Board of Film Classification. Archived from the original on 28 ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்பிரல் 2016.