பாபநாசம் குறள்பித்தன்

தமிழக எழுத்தாளர்

பாபநாசம் குறள்பித்தன் (பிறப்பு: த. வெ. கண்ணன், 19. சூலை 1947- 2017) என்பவர் ஒரு தமிழக குழந்தை எழுத்தாளர், பத்திரிக்கையாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின், பாபநாசத்தில் தனம், வெங்கிடாசலம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தஞ்சாவூர் கரந்தை புலவர் கல்லூரியில் பயின்றார்.

எழுத்துப் பணியில் ஆர்வம் கொண்ட இவர் 1965 இல் முதன் முதலில் சுதேசமித்திரன் நாளிதழில் முதன் முதலில் எழுதினார். ம.கோ.இரா நடத்தி வந்த "தாய்' வார இதழில் துணையாசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

இவர் சிறுவர் நூல்கள், ஆன்மிக நூல்கள, நாடக நூல்கள், கவிதை நூல்கள், போன்ற பல்துறை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய விலங்குகள் சொல்லும் விந்தைக் கதைகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் “சிறுவர் இலக்கியம்” எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இவரது மரபுரிமையாளர்களுக்கு ரூ 5 இலட்சம் பரிவுத் தொகை அளிக்கப்பட்டு இவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.[1][2]

பெற்ற விருதுகள்

தொகு
  • வி.ஜி.பி. விருது "சிறந்த கவிஞர்' பரிசு 1,000 ரூபாய் ஆண்டு 1984
  • மனித நேய அறக்கட்டளை பரிசு 7,500 ரூபாய் ஆண்டு 2001.
  • திருப்பூர் தமிழ்ச் சங்கம்: "மன்னனின் பேராசை' சிறுவர் நூலுக்கான முதல் பரிசு 2000 ரூபாய். ஆண்டு 2002.
  • தமிழக அரசின் சிறுவர் இலக்கியத்திற்கான சிறந்த நூல் பரிசு 10,000 ரூபாய்.
  • காஞ்சி அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் விருது "முத்தமிழ்ச்சுடர்' ஆண்டு 2008.
  • மதுராந்தகம் மகாகவி பாரதி நற்பணி மன்றம். விருது. "படைப்புச் செம்மல்' 2008.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபநாசம்_குறள்பித்தன்&oldid=3901766" இலிருந்து மீள்விக்கப்பட்டது