பாபா சிவோ
பாபா சிவோ (Baba Shivo) ( கோரன் பாபா என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 13-14 ஆம் நூற்றாண்டு) ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வழிபடப்படும் ஒரு நாட்டுப்புற தெய்வம் ஆகும். இவர் ஒரு போர்வீரனாக ருத்ர அன்ஷ்சின் அவதாரமாக போற்றப்படுகிறார். இவர் ஜம்முவின் நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார். ராஜா லத் தேவ் அல்லது ராஜா லதா மற்றும் ராணி கலாவதி அல்லது ராணி கல்லி ஆகியோரின் மகன் என்பதைத் தவிர, இவரைப் பற்றிய சிறிய வரலாற்றுத் தகவல்களே உள்ளது.
பாபா சிவோ ஜி (பாபா கோரன்) | |
---|---|
இடம் | கோரன் ,ஜம்மு காஷ்மீர், சம்பா, ஜம்மு காஷ்மீர், இந்தியா |
பெற்றோர்கள் | இராஜா லத் தேவ் (தந்தை), ராணி கலாவதி (தாயார்) |
இராச்சியம்
தொகுபாபா சிவோவின் தந்தை பட்டன் என்ற பகுதியின் அரசனாவார். பட்டன் என்பது காஷ்மீரின் வரலாற்றுத் தலைநகரங்களில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட பள்ளத்தாக்கின் மையத்தில் உள்ளது. நகராட்சி எல்லைக்குள் இரண்டு அரண்மனைகள் உட்பட நான்கு அரண்மனைகளின் எச்சங்களை பட்டன் வட்டத்தில் காணலாம். காஷ்மீரின் மன்னன் சங்கரவர்மன் பட்டனா என்ற நகரத்தை கட்டியதாக ராஜதரங்கிணி சொல்கிறது. [1]
கதை
தொகுபுராணத்தின் படி, சிவோ குரு கோரக்நாத்தின் ஆசீர்வாதத்துடன் பிறந்தார். குரு இவரது பெற்றோரான ராஜா லத் தேவ் மற்றும் ராணி கல்லி ஆகியோருக்கு சிவபெருமானைப் போன்ற ஒரு குழந்தையைப் பெற ஆசீர்வதித்தார். அந்தக் குழந்தைக்கு சிவனின் பெயர் சூட்டப்பட்டது.
இவர் வளர்ந்ததும், ஜம்முவின் ராஜா மல் தேவ் அரண்மனையில் வேலை செய்ய முடிவு செய்தார். நாட்டுப்புறக் கதைகளின்படி, பொதுமக்களின் விலங்குகளைக் கொல்லும் ஒரு சிங்கம் இப்பகுதியில் வந்தது. சிங்கத்தைக் கொல்பவருக்கு பரிசு வழங்குவதாக ராஜா அறிவித்தார். ஒரு நாள் சிவோ ஜம்முவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அந்த சிங்கத்தைக் கண்டு, தன் வாளால் அதைக் கொன்று, அதன் காதுகளை அறுத்து, அரண்மனையின் தூணுக்கு அடியில் வைத்தார். இதன் காரணமாக, அரசர் இவர் ஒரு தெய்வீக மனிதரான "பாபா" என்பதை உணர்ந்து, இவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
சிவோ தோதாரா என்ற இசைக்கருவியை வாசித்தார். சமோதாவைச் சுற்றியுள்ள பகுதியில், கோரன் மலைகளில் காரத்காத்ரி ராஜபுத்திரர்கள் வசித்து வந்தனர். இச்சமயத்தில், கரத்காத்ரிகளின் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து இசையைக் கேட்பார்கள். இதனால் கோபமடைந்த கரத்காத்ரிகள் சிவோவை கொலை செய்ய சதி செய்தனர். அவர்கள் இவரது "பாபா"வின் தலையை வெட்டினார்கள். ஆனால் இவரது உடல் கோரனுக்குச் சென்றது, அங்கு பாபாவின் கோவில் கட்டப்பட்டது. பெரும்பாலான காரத்காத்ரிகள் பாபாவின் சாபத்தால் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறி தங்கள் வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டனர். உண்மையான இதயத்துடனும் வலுவான உறுதியுடனும் பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் விருப்பங்களை பாபா கோரன் நிறைவேற்றுகிறார் என்று கூறப்படுகிறது. பலர் பாபாவிடம் விருப்பங்களைக் கேட்கிறார்கள், பின்னர் ஆசை நிறைவேறிய பிறகு கோவிலில் பண்டாரா (அன்னதானம்) வழங்குகிறார்கள். [2] இங்கு பாபாவின் பெயரால் ஆடு பலியும் கொடுக்கப்படுகிறது. பாபா சிவோ (கோரன் பாபா) சூர்யவன்ஷி டோக்ரா ராஜபுத்திரர்களின் சர்மல் குலத்தின் குலதெய்வம் ஆவார். [3] [4] முக்கியமாக ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். [2]
திருவிழாக்கள்
தொகுஇக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பாபா சிவோவின் பெயரில் மல்யுத்தம் நடைபெறும். [5] பாபா சிவோ சக்தி யாத்திரை சமோதாவிலிருந்து கோரன் வரை நடைபெறுகிறது. [6]
சான்றுகள்
தொகு- ↑ Rajatarangini of Kalhana: Kings of Kashmira/Book V, p. 121
- ↑ 2.0 2.1 Excelsior, Daily (June 21, 2015). "Ancient shrine of Baba Shivo crying for attention".
- ↑ "अमर क्षत्रिय राजपूत सभा में सामाजिक कुरीतियों पर चर्चा". Dainik Jagran.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Baba Shivo Amar Gatha, p18, Priest of Baba Shivo Temple
- ↑ "JBSMKD Maha Dangal".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Baba Shivo Amar Gatha, p12, Priest of Baba Shivo Temple