பாபா புதன்கிரி

பாபா புதன்கிரி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை ஆகும்  இது கருநாடக மாநிலத்தில் சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ளது.  இந்த மலையை இந்துக்களும் இசுலாமியர்களும் தத்தம் புனித இடங்களாகக் கருதி இங்கு புனிதப் பயணம் செய்து வருகிறார்கள்.  சூபி துறவியான அசுரத் தாதா ஆயத் காலாந்தர் நினைவை இங்கு போற்றுகிறார்கள்.

இந்த மலைத் தொடர்ச்சியில் முல்லையன கிரி என்றும் பாபா புதன்கிரி என்றும் இரண்டு மலைகள் உள்ளன. பிறை நிலா போன்று தோற்றம் உள்ள காரணத்தால் சந்திர துரோன சிரேணி என்ற பெயரும் இதற்கு உண்டு.[1] இந்த மலையின் உயரம் 6317 அடி ஆகும். இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கின்றது.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_புதன்கிரி&oldid=2416489" இலிருந்து மீள்விக்கப்பட்டது