பாபுலால் பட்டோடி
பாபுலால் பட்டோடி (Babulal Patodi) இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் மற்றும் சுதந்திர ஆர்வலர் ஆவார்.[1]1920 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று பாபுலால் பிறந்தார்.
பாபுலால் பட்டோடி Babulal Patodi | |
---|---|
பிறப்பு | 15 சூன் 1920 சும்தா, இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 25 சனவரி 2012 இந்தூர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
கல்லறை | 84 குமாசுட்ட நகர், இந்தூர் 22°44′44″N 75°46′23″E / 22.74556°N 75.77306°E |
பணி | சமூகப் பணியாளர் சுதந்திர ஆர்வலர்r |
பெற்றோர் | சோக்கலால்ஜி பட்டோடி |
பிள்ளைகள் | மூன்று மகன் மற்றும் மகள் |
விருதுகள் | பத்மசிறீ |
1962 ஆம் ஆண்டு இந்தூர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் பாபுலால் பணிபுரிந்துள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த உறுப்பினராக இருந்தார்.[2] 1949-50 மற்றும் 1953-54 ஆம் ஆண்டுகளில் பாபுலால் இந்தூர் காங்கிரசு குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.[3] 1991 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான் பத்மசிறீ விருதை வழங்கி பாபுலால் பட்டோடியைச் சிறப்பித்தது.[4] 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 அன்று 92 வயதில் பாபுலால் வயதான காலம் என்பதாலும் நோய்களால் பாதிக்கப்பட்டும் இறந்தார். இவருக்கு நரேந்திர பட்டோடி என்ற ஒரு மகன்யா இருக்கிறார்.[1] பாபுலால் நினைவாக கோமத்கிரி மலைகளில் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Patodi passes away". Free Press Journal. 2015. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
- ↑ "Veteran Congress Leader Babulal Patodi passes away". Money Control. 25 January 2012. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
- ↑ Rodney W. Jones (1974). Urban Politics in India: Area, Power, and Policy in a Penetrated System. University of California Press. p. 420. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520025455. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
Babulal Patodi.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Statues of the living divide Digambar Jains". Indian Express. 24 April 2007. http://archive.indianexpress.com/news/statues-of-the-living-divide-digambar-jains/29166/. பார்த்த நாள்: 9 October 2015.