பாபு எம். பலிச்சேரி

இந்திய அரசியல்வாதி

பாபு எம். பலிசேரி (Babu M. Palissery) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிசம்) சார்பில் திருச்சூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், குன்னங்குளம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றினார். குன்னங்குளம் சட்டசபைத் தொகுதியிலிருந்து 2006 முதல் 2016 வரை இரண்டு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2006 கேரள சட்டமன்றத் தேர்தலில் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை 21,785 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2011 கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் குன்னங்குளத்திலிருந்து இரண்டாவது முறையாக கேரள சட்டமன்ற உறுப்பினராக தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி. பி ஜானை தோற்கடித்தார்.

பாபு எம். பலிச்சேரி
Member of the [[கேரள சட்டமன்றம் சட்டமன்றம்]]
குன்னங்குளம், திருச்சூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சங்கரநாராயணன்

13 மே 1958
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்)
துணைவர்இந்திரா
பிள்ளைகள்அகில் (மகன்)
அஸ்வதி (மகள்)

சொந்த வாழ்க்கை

தொகு

சின்னப்பன் நாயர்-அம்மினியம்மா ஆகியோருக்கு மூத்த மகனாக சங்கரநாராயணனாகப் பிறந்தார். இவருக்கு அனியன், பாலாஜி, தங்கமோல், ராஜி என்ற நான்கு உடன்பிறப்புகள் உள்ளனர். 38 வயதில், இவர் இந்திரா என்பவரை மணந்தார். தம்பதியினருக்கு அஸ்வதி (மகள்), அகில் (மகன்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_எம்._பலிச்சேரி&oldid=3211739" இலிருந்து மீள்விக்கப்பட்டது