பாம்பு நச்சு
பாம்பு நச்சு (Snake venom) என்பது பெருமளவு மாற்றமடைந்த பாம்பின் உமிழ்நீர்.[1] இது பல்வேறு புரதங்கள், நொதிகள் மற்றும் சில அடங்கிய கலவை.[2] பாம்புகளின் நச்சுச் சுரப்பிகள் என்பவை மாற்றமடைந்த பரோட்டிட் உமிழ்நீர்ச் சுரப்பிகளே.
நச்சின் தன்மை ஒவ்வொரு வகைப் பாம்பையும் பொறுத்து மாறுபடும். நல்ல பாம்பின் நச்சு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். விரியன் பாம்பின் நச்சு குருதியைப் பாதிக்கும். கடற்பாம்பு நச்சோ நரம்பு மண்டலம், குருதி இரண்டையும் பாதிப்பதோடு தசைகளையும் பாதிக்கும்.
பயன்கள்
தொகுபாம்பு நஞ்சில் உள்ள சில் பொருட்கள் மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளன. Pit viper என்னும் ஒருவகை விரியன் பாம்பின் நஞ்சில் உள்ள பொருளுக்கு குருதி அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது கண்டறியப்பட்டது. அந்த பொருளை ஆராய்ந்து, அதை செயற்கையாக தயாரித்து குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Reptile Venom Research". Australian Reptile Park. Archived from the original on 2 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 21 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ (edited by) Halliday; Adler, Tim; Kraig (2002). Firefly Encyclopedia of Reptiles and Amphibians. Toronto, Canada: Firefly Books Ltd. pp. 202–203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55297-613-0.
{{cite book}}
:|last=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ நல்லதும் செய்யும் நஞ்சு!, ஹாலாஸ்யன், இந்து தமிழ், 2019 நவம்பர் 26