பாய் பாலா (1466-1544), தல்வண்டி ராய் போய் (நங்கனா சாஹிப்) எனும் இடத்தில் பிறந்தார்.[1][2] இவர் பாய் மர்தானா மற்றும் குருநானக்கின் ஆகியோரின் வாழ்நாள் தோழரும் ஆவார். இவர் குருநானக் மற்றும் பாய் மர்தானாவுடன் சீனா, மக்கா மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்தார். இவர் 1544 ஆம் ஆண்டு கதூர் சாஹிப் எனும் இடத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.[1][3]

பாய் பாலா உள்ளிட்டோர் அடங்கிய சீக்கிய குருமார்களின் 19 ஆம் நூற்றாண்டு தஞ்சாவூர் பாணி ஓவியம்

நம்பகத்தன்மை தொகு

பாய் பாலாவின் இருப்பு குறித்து, குறிப்பாக சீக்கிய கல்வித்துறைக்குள் பெருமளவிலான விவாதம் நடந்துள்ளது. இதற்கான காரணங்கள்:

  • குருநானக்கின் அனைத்து முக்கிய சீடர்களையும் பட்டியலிட்டுள்ள பாய் குர்தாஸ் பாய் பாலாவின் பெயரைக் குறிப்பிடவில்லை (அதேவேளை அவர் ராய் புலாரையும் குறிப்பிடவில்லை).
  • பாய் மணிசிங்கின் பகத் ரத்தன்வாலியிலும் இவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.
  • பாய் பாலாவின் ஜனம்சகியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.[4][5]
  • குரு கோவிந்த் சிங்கின் காலத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த வாகே குரு ஜி கி ஃபதே எனும் சொற்றொடர் சீக்கிய வணக்கம் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 McLeod, W.H., Guru Nanak and the Sikh Religion. Oxford, 1968.
  2. A Gateway to Sikhism | Early Gursikhs: Bhai Bala Ji - A Gateway to Sikhism
  3. Max Arthur Macauliffe, 1909
  4. Singh, Dr Kirpal, Janamsakhi Tradition (An Analytical Study). Singh Brothers, 2004.(page 10)
  5. Dr. Kirpal Singh. "Janamsakhi Tradition – An Analytical Study" (PDF). Archived from the original (PDF) on 1 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்_பாலா&oldid=3562804" இலிருந்து மீள்விக்கப்பட்டது