பாய் மன்வீர் சிங்
பாய் மன்வீர் சிங் (Bhai Manvir Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சீக்கிய அறிஞர் மற்றும் கலைஞர் ஆவார். [1] 1985 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபாய் மன்வீர் சிங் 1985 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டுசையரில் பிறந்தார். [2] [3] கிங்சு கல்லூரியின் கூட்டிணைப்பில் சமயப் படிப்புகள் மற்றும் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சீக்கிய ஆய்வுகளில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றார். [2] [3] இவரது கல்விப் பணி சீக்கிய வரலாறு, தத்துவம் மற்றும் மானுடவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. [2]
முன்னதாக, சிங் ஐக்கிய இராச்சிய சீக்கியக் குழுவிலும் பிரிட்டன் பஞ்சாபிகள் அனைத்து நாடாளுமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். [2] இந்த அமைப்புகளில் இவரது ஈடுபாடு சீக்கிய சமூக விவகாரங்களில் இவருக்கு இருந்த ஆர்வத்தை பிரதிபலித்தது. [2]
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட்டின் தாக்கம் குறித்தும் ஐரோப்பா கண்டத்தில் சீக்கிய சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை குறித்தும் சிங் ஆய்வு செய்தார். [2] ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சீக்கிய சமூகம், பிரிட்டனில் உள்ள அவர்களது சகாக்களுடன் ஒப்பிடும்போது, அரசியல் அமைப்புகளில் குறைவாகவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இது பிரெக்சிட்டிற்குப் பிந்தைய சிரமங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் வாதிட்டார். [2] இந்த நிகழ்வில் சிங்கின் கருத்துக்கள் மற்றும் ஆராய்ச்சிகள் பிரித்தானிய மற்றும் சீக்கிய ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. [2]