மின்காந்தத் தூண்டல்

(பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்பது, ஒரு கடத்தி மாறும் காந்தப்பாயத்திற்கு ஆட்படும்போது, அக்கடத்தியின் இரு முனைகளுக்கிடையே மின்னழுத்தம் உண்டாகும் நிகழ்வைக் குறிக்கிறது. பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள் ( Faraday's law of electromagnetic induction ) இரு நிலைப்படும்.

முதல் விதி
தொகு

ஒரு முற்றுப்பெற்ற மின் சுற்றுடன் இணைந்த கடத்தியின் காந்தப் பாயம் (Flux) எப்போதெல்லாம் மாறுகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கடத்தியின் சுருளில் ஒரு மின் இயக்கு விசை(E.M.F) தோற்றுவிக்கப்படுகிறது அல்லது தூண்டப்படுகிறது எனக் கூறுகிறது. .இந்த விளைவு காந்த பாயம் மாறும்போது மட்டுமே ஏற்படும்.

இரண்டாவது விதி
தொகு

தூண்டப்பட்ட மின் இயக்குவிசையின் அளவு அலகு நேரக் காந்தப் பாயத்தின் மாறுபாட்டிற்கு நேர் வீதத்தில் உள்ளது.

வரலாறு

தொகு

1831ல் மைக்கெல் ஃபாரடே[1][2] என்பார் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. 1832ல் ஜோசப் ஹென்றி என்பாரும் சார்பில்லாமல் இதனை கண்டுபிடித்ததாகவும் அறியப்படுகிறது.[3][4] ஆனால் ஃபாரடே தான் முதலில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

ஒரு மூடப்பட்ட சுற்று காந்தப் பாயத்துடன் தொடர்பு கொண்டிருக்கும்போது, அக்காந்தப் பாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அதன் விளைவாக அச்சுற்றில் தூண்டப்படும் மின்னழுத்தம் அதில் மின்னோட்டத்தைத் தூண்டுகிறது. அவ்வாறு உருவாகும் மின்னழுத்தத்தைத் தூண்டப்பட்ட மின் இயக்கு விசை எனவும், அப்போது அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தைத் தூண்டப்பட்ட மின்னோட்டம் என்றும் அழைப்பர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ulaby, Fawwaz (2007). Fundamentals of applied electromagnetics (5th ed.). Pearson:Prentice Hall. p. 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-241326-4.
  2. "Joseph Henry". Distinguished Members Gallery, National Academy of Sciences. Archived from the original on 2006-12-09. பார்க்கப்பட்ட நாள் 2006-11-30.
  3. "A Brief History of Electromagnetism" (PDF).
  4. "Electromagnetism". Smithsonian Institution Archives. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்காந்தத்_தூண்டல்&oldid=3726445" இலிருந்து மீள்விக்கப்பட்டது