ஜோசப் ஹென்றி

ஜோசஃப் ஹென்றி (Joseph Henry, திசம்பர் 17, 1797 – மே 13, 1878) இசுமித்சோனியன் கழகத்தின் முதல் செயலாளராகவும் இந்நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் ஊக்குவிற்பிற்கான தேசியக் கழகத்தின் நிறுவன உறுப்பினராகவும் பணியாற்றிய அமெரிக்க அறிவியலாளர் ஆவார்.[1] தமது வாழ்நாளில் மிகவும் மதிக்கப்பட்டவராக விளங்கினார். மின்காந்தங்களை உருவாக்குகையில் மின்காந்தவியல் நிகழ்வான தன்-தூண்டத்தை கண்டறிந்தார். தவிரவும் மைக்கேல் பரடே(1791-1867) கண்டறிந்த பரிமாற்றத் தூண்டலை தானும் தன்னிச்சையாக கண்டறிந்தவர்; இருப்பினும் பரடேதான் தனது ஆய்வை முதலில் வெளியிட்டவர்.[2][3] ஹென்றி மின்காந்தத்தை நடைமுறைக்கேற்ற கருவியாக உருவாக்கினார். மின்சார வாயிற்மணிக்கு (குறிப்பாக மின் கம்பி வழியாக சற்றுத்தொலைவில் இருக்கும் மணியை ஒலிக்கச் செய்தல்,1831) முன்னோடியானதொரு கருவியை உருவாக்கினார்.[4] மின்சார உணாத்தியின் முன்னோடியையும் (1835) வடிவமைத்தார்.[5] தூண்டத்திற்கான அனைத்துலக அலகான என்றி இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவர் உருவாக்கிய மின்காந்த உணாத்திகளே சாமுவேல் மோர்சும், (1791-1872) சேர் சார்லசு வீட்சுடோனும் (1802-1875) தனித்தனியே கண்டறிந்த நடைமுறை மின்சாரத் தந்திக்கு அடித்தளமாயிற்று.

ஜோசப் ஹென்றி
பிறப்பு(1797-12-17)திசம்பர் 17, 1797
ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்), ஐ.அ
இறப்புமே 13, 1878(1878-05-13) (அகவை 80)
வாசிங்டன், டி. சி., ஐ.அ
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்அல்பனி அகாதமி
அறியப்படுவதுமின்காந்தத் தூண்டல், மின்னியல் வாயில்மணிக்கும் உணாத்திக்கும் முன்னோடியை கண்டுபிடித்தவர்
சமயம்பிரெசுபைட்டீரிய திருச்சபை
வாழ்க்கைத்
துணை
ஹாரியத் ஹென்றி (முன்னர் அலெக்சாண்டர்)
பிள்ளைகள்வில்லியம் அலெக்சாண்டர் (1832–1862)
மேரி அன்னா (1834–1903)
ஹெலன் லூயிசா (பி. 1836)
கரோலின் (பி. 1839)
மின்னியலுக்கான ஹென்றியின் பங்களிப்பை நினைவுகூறுமுகமாக அகாதமி பூங்காவில் (ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)) உள்ள அறிவிக்கைப் பலகை.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Planning a National Museum". Smithsonian Institution Archives. Archived from the original on 3 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ulaby, Fawwaz (2001-01-31). Fundamentals of Applied Electromagnetics (2nd ed.). Prentice Hall. pp. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-032931-2.
  3. "Joseph Henry". Distinguished Members Gallery, National Academy of Sciences. Archived from the original on 2006-12-09. பார்க்கப்பட்ட நாள் 2006-11-30.
  4. Scientific writings of Joseph Henry, Volume 30, Issue 2. Smithsonian Institution. 1886. p. 434.
  5. "The electromechanical relay of Joseph Henry". Georgi Dalakov.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Joseph Henry
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஹென்றி&oldid=3609047" இலிருந்து மீள்விக்கப்பட்டது