பாரத் பூசன் தியாகி

இந்திய உழவர் மற்றும் கல்வியாளர்

பாரத் பூசன் தியாகி (Bharat Bhushan Tyagi) இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலம் புலந்தசகர் நகரத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியாவார்.[3][4] 1954 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு கல்வியாளராகவும் பயிற்சியாளராகவும் அறியப்படுகிறார். 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[1][5] புலந்தசகர் நகரத்தில் உழவர்களுக்கு வாராந்திர பயிற்சியை ஏற்பாடு செய்து 80,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட உழவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.[6] பிரதமர் நரேந்திர மோடியின் முற்போக்கு விவசாயி விருதையும் பாரத் பூசன் தியாகி பெற்றார்.[2]

பாரத் பூசன் தியாகி
Bharat Bhushan Tyagi
பிறப்பு1954
புலந்தசகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஉழவர், கல்வியாளர்
விருதுகள்பத்மசிறீ, 2019[1]
பிரதமரின் முற்போக்கு விவசாயி விருது[2]

கல்வி மற்றும் தொழில் தொகு

தியாகி தில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். தேசிய கரிம வேளாண்மை மையம், இயற்கை வேளாண்மைக்கான சர்வதேச திறன் மையம், விவசாய அமைச்சகம் (இந்தியா), விவசாய நிதி நிறுவனம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி போன்ற அரசாங்க சங்கங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.[2]

விருது தொகு

  • 2019 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது[1]
  • பிரதமரின் முற்போக்கு விவசாயி விருது[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "List of Padma Awardees 2019" (PDF). Padmaawards.gov.in. இந்திய அரசு.
  2. 2.0 2.1 2.2 2.3 Dhamecha, Sheetal (January 28, 2018). "Meet the Farmers who won the Padma Shri Award". Krishi Jagran. https://krishijagran.com/news/meet-the-farmers-who-won-the-padma-shri-award/. 
  3. Shukla, Arvind (March 15, 2018). "खेत उगलेंगे सोना, अगर किसान मान लें पद्मश्री भारत भूषण की ये 5 बातें" (in Hindi). Gaon Connection. https://www.gaonconnection.com/desh/these-5-things-of-bharat-bhushan-tyagi-will-help-to-farmers-increase-income-agriculture-know-how-to-double-your-farm-income. 
  4. "The Global PGS Newsletter". IFOAM – Organics International N.6 Vol.6 (July August 2016). https://www.ifoam.bio/sites/default/files/pgsnewsletter_julyaug2016_2.pdf. 
  5. "इस किसान ने किया ऐसा काम, अब मिलेगा पद्मश्री सम्मान" (in Hindi). Patrika. https://www.patrika.com/bulandshahr-news/padma-shri-award-will-receive-bharat-bhushan-tyagi-for-organic-farming-4038534/. 
  6. "President Ramnath Kovind presents Padma Shri to Bharat Bhushan Tyagi for Agriculture". Odisha Diary. March 16, 2019. http://orissadiary.com/president-ramnath-kovind-presents-padma-shri-bharat-bhushan-tyagi-agriculture/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_பூசன்_தியாகி&oldid=3932397" இலிருந்து மீள்விக்கப்பட்டது