பாரத் ரத்ரா

பாரத் விஷ்ணு இரத்ரா (Bharat Vishnu Ratra) (பிறப்பு: ஜனவரி 26, 1960) இந்திய அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியல் ஆய்வாளரும் வான்துகள் இயற்பியலாளரும் ஆவார். இவர் தற்போது கன்சாசு மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்..[1] இவர் கரும் ஆற்றல் இயங்கியல், குவைய இயக்கவியல் சார்ந்த ஆற்றல் அடர்த்தி உருவாக்கம், உப்புதல் கட்ட அண்டக் காந்தப் புல அலைவு ஆகிய ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர்.

பாரத் விஷ்ணு இரத்ரா
Bharat Vishnu Ratra

பிறப்பு சனவரி 26, 1960 (1960-01-26) (அகவை 64)
மும்பை, இந்தியா
Alma materஇந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி (மூதறிவியல்)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (முனைவர்)
துறை ஆலோசகர்இலியோனார்டு சுசுகிண்டு
மீழ்சல் பெசுக்கின்
அறியப்பட்டதுநிறைமானம் (இயற்பியல்)
கருப்பு ஆற்றல்

வாழ்க்கை

தொகு

இவர் மும்பையில் பிறந்தார். இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி யில் இயற்பியலில் மூதறிவியல் பட்டம் 1982 இல் பெற்றார். இவர் முனைவர் பட்டத்தை இயற்பியலில் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இலியோனார்டு சுசுகிண்டு, மீழ்சல் பெசுக்கின் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் பெற்றார்.

இவர் தன் முதுமுனைவர் பட்டத்தை இசுட்டான்போர்டு நேரியல் முடுக்கி மையம், பிரின்சுட்டன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், மசாச்சூசட்சு தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய அமைப்புகளில் ஆய்வு செய்து பெற்றார். இவர் 1996 இல் கன்சாசு மாநிலப் பலகலைக்கழகத்தில் 1996 இல் இயற்பியல் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். இவர் இணைப் பேராசிரியராக 2001 இல் பதவி உயர்வு பெற்று, 2004 இல் பேராசிரியர் ஆனார்.

கல்வியும் ஆராய்ச்சியும்

தொகு

இவர் அண்டவியலிலும் வான்துகள் இயற்பியலிலும் தொடக்க அண்ட இயற்பியலிலும் பல தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.

இவர் 1988 இல் பிரின்சுட்டன் பல்கலைக்கழக ஜேம்சு பீபுள்சுடன் இணைந்து இருண்ட ஆற்றல் அளவன்புலம் கருத்தை முதன்முதலில் முன்மொழிந்தனர். இந்தக் கருப்படிமம் நிறைநிலைப் படிமம் என வழங்கப்படுகிறது.[2][3] இருண்ட ஆற்றல் முடுங்கிய அண்ட விரிவாக்கத்துக்கான பொறிமுறையின் பொறுப்பை ஏற்கும் முதன்மையான முகமையாக விளங்குகிறது.[4][5]

இவரும் இவர்து மாணவர்களும் இணைப்பணியாளர்களும் முதன்முதலில் மிகமுந்தைய அண்ட விரிவாத்துக்கும் நடப்பு அண்ட விரிவாக்கத்துக்கும் இடையில் அமையும் செம்பெயர்ச்சி அள வீட்டின் வழியாக, முந்தைய விரிவாக்க ஆற்றல் பாதீட்டில் ஓங்கலாக இருண்ட ஆற்றலும் அடர்துகள் பொருண்மமும் விளங்கியதால் விரிவாக்கம் ஒடுக்கநிலையில் இருந்ததையும் நடப்பு அண்ட விரிவாக்க ஆற்றல் பாதீட்டில் ஓங்கலாக இருண்ட ஆற்றல் விளங்குவதால் விரிவாக்கம் முடுக்கப்பட்டு உள்ளதையும் விளக்கினர்.[6][7]

இவரும் இவரது மாணவர்களும் இணைப்பணியாளர்களும் புதிய அண்டவியல் ஆய்கருவிகளை உருவாக்கி, அவற்றோடு நன்கு நிறுவிய நடப்புக் கருவிகளையும் அபுள் மாறிலி (அபுள் விதி), வெளியின் வடிவியல் (அண்டத்தின் உருவடிவம்), இருண்ட ஆற்றல் இயங்கியல் ஆக்கியவற்றை அளக்கப் பயன்படுத்தினர். [8][9]

இவரது மிகமுந்தைய அண்டத்தின் ஆராய்ச்சி, அண்ட உப்புதலின்போது உருவாகும் ஆற்றல் அடர்த்தியின் சிற்றுலைவுகள் சார்ந்த, முதல் தொடர்ந்து பொருந்தும், பகுதிச் செவ்வியலான கணிப்பை உள்ளடக்கியது. இவர் இந்தக் கணிப்பில் ஆசுட்டினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழக வில்லி பிசுச்சிலருடனும் இசுட்டன்போர்டு பல்கலைக்கழக இலியோனார்டு சுசுகிண்டுடனும் இணைந்து பணிபுரிந்தார்.[10][11]

இவர் முதல் அண்ட உப்புதல் படிமத்தை உருவாக்கி, முன்மொழிந்து எப்படி முந்து பாழ்மை போதிய பேரியல் அண்டக் காந்தப் புலங்களை உருவாக்குகின்றன என்பதை விளக்கினார். இது பால்வெளிகளின் நோக்கீட்டுவழி அறிந்துள்ள காந்தப் புலங்களை விளக்குகிறது.[12]

தகைமைகள்

தொகு
  • தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER விருது (1999)
  • அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினர் (2002)
  • அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுறுப்பினர் (2005)
  • அடிப்படை அறிவியலில் ஒலின் பித்தேபிழ்சு விருது (2017)

மேற்கோள்கள்

தொகு
  1. "Department of Physics". ksu.edu.
  2. P. J. E. Peebles and B. Ratra, "Cosmology with a time-variable cosmological 'constant'", Astrophys. J. 325, L17 (1988) (PDF)
  3. B. Ratra and P. J. E. Peebles, "Cosmological consequences of a rolling homogeneous scalar field", Phys. Rev. D 37, 3406 (1988)
  4. P. J. E. Peebles and B. Ratra, "The cosmological constant and dark energy", Rev. Mod. Phys. 75, 559 (2003)
  5. * B. Ratra and M. S. Vogeley, "The beginning and evolution of the universe", Pub. Astron. Soc. Pacific 120, 235 (2008)
  6. O. Farooq and B. Ratra, "Hubble parameter measurement constraints on the cosmological deceleration-acceleration transition redshift", Astrophys. J. 766, L7 (2013)
  7. O. Farooq, F. R. Madiyar, S. Crandall and B. Ratra, Astrophys. J. 835, 26 (2017)
  8. S. Cao and B. Ratra, "Using lower redshift, non-CMB, data to constrain the Hubble constant and other cosmological parameters", Mon. Not. Roy. Astron. Soc. 513, 5686 (2022)
  9. J. de Cruz Perez, C.-G. Park and B. Ratra, Phys. Rev. D 107, 063522 (2023)
  10. W. Fischler, B. Ratra and L. Susskind, "Quantum mechanics of inflation", Nucl. Phys. B 259, 730 (1985)
  11. B. Ratra, "Restoration of spontaneously broken continuous symmetries in de Sitter spacetime", Phys. Rev. D 31, 1931 (1985) (PDF)
  12. B. Ratra, "Cosmological `seed' magnetic field from inflation", Astrophys. J. 391, L1 (1992) (PDF)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_ரத்ரா&oldid=3782361" இலிருந்து மீள்விக்கப்பட்டது