பாரம்பரியச் சதுக்கம்

பாரம்பரியச் சதுக்கம் அல்லது சௌக் சந்தை பாரம்பரியச் சதுக்கம் என்பது சூரத்து பழைய நீதிமன்றப் பகுதியில் உள்ள சௌக் சந்தையில் அமைந்துள்ள பாரம்பரிய இடமாகும்.[1] பாரம்பரியச் சதுக்கத்தின் கட்டிடக்கலை பிரித்தானிய மற்றும் முகலாய கட்டடக் கலையினைச் சார்ந்தது.

சௌக் சந்தை பாரம்பரியச் சதுக்கம்
அமைவிடம்சௌக் சந்தை, சூரத்து, குசராத்து, இந்தியா
ஆள்கூறுகள்21°11′47″N 72°49′04″W / 21.196266°N 72.817782°W / 21.196266; -72.817782
உரிமையாளர்சூரத்து மாநகராட்சி

2013ஆம் ஆண்டில், சூரத் மாநகராட்சி பாரம்பரியச் சதுக்கத்தை மறுசீரமைக்கத் தொடங்கியது.[2][3] இது தற்போது சூரத் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.

கருப்பொருளும் ஈர்ப்புகளும்

தொகு

பாரம்பரியச் சதுக்கத்தில் ஏழு முக்கிய இடங்கள் உள்ளன. இவை:

சூரத் கோட்டை

தொகு

சூரத்தின் பழைய கோட்டை அல்லது சூரத்துக் கோட்டை என்றும் அழைக்கப்படும் சூரத்து கோட்டை 16ஆம் நூற்றாண்டில் குடாவந்த் கானால் கட்டப்பட்டது.[4]

ஆண்ட்ரூசு நூலகம்

தொகு

ஆண்ட்ரூசு நூலகம் சூரத்தில் உள்ள 175 ஆண்டுகள் பழமையான நூலகமாகும்.[5]

ஜா. ஜீ. பயிற்சி கல்லூரி

தொகு

கோட்டையின் முன் அமைந்துள்ள ஒரு முன்னாள் ஆங்கிலப் பள்ளி 1827ஆம் ஆண்டில் சேத் சோராப்ஜி ஜாம்செட்ஜி ஜீஜீபாய் வழங்கிய நன்கொடையிலிருந்து நிறுவப்பட்டது. பின்னர் இந்தப் பள்ளி "சோராப்ஜி ஜாம்செட்ஜி ஜீஜீபாய் உயர்நிலைப் பள்ளி" என்று தரம் உயர்த்தப்பட்டது. 1939ஆம் ஆண்டில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு கல்லூரியைத் தொடங்குவதற்காக இந்த உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் மூடப்பட்டது.

பழைய அருங்காட்சியகம்

தொகு

பழைய அருங்காட்சியகம் ஆங்கிலேயர்களின் காலத்தில் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலிக்கன் தேவாலயம்

தொகு

ஆங்கிலிகன் தேவாலயம், கத்தோலிக்கக் கிறித்தவத் திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. இது சூரத்தின் பழமையான தேவாலயமாகும். ஆங்கிலிகன் தேவாலயம் 19ஆம் நூற்றாண்டில் பிரபலமான மேற்கத்திய வடிவமைப்பின் படி 1824இல் கட்டப்பட்டது. இந்தத் தேவாலயக் கட்டிடத்தின் கட்டுமானம் 1820ஆம் ஆண்டு மவுண்ட் இசுடூவர்ட் எல்பிசுடனின் ஆசீர்வாதத்தின் கீழ் தொடங்கப்பட்டது.[6] இந்தத் தேவாலயத்தின் முக்கியச் சிறப்பம்சமாக 10-அடி நீளமான (3.0 மீ) சிலுவை மற்றும் 300 ஆண்டுகள் பழமையான வேதகமா நூல் ஆகும்.[7]

கசுதூரிபா தோட்டம்

தொகு

கசுதூரிபா காந்தி பால் உத்யான் ஆங்கிலிகன் தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தோட்டம் ஆகும்.

விக்டோரியா தோட்டம் (காந்தி புவாக்)

தொகு

காந்தி புவாக் என்று அழைக்கப்படும் விக்டோரியா தோட்டம் சூரத் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.

பிற சுற்றுலா இடங்கள்

தொகு

பாரம்பரியச் சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள பிற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்:

மேற்கோள்கள்

தொகு
  1. "Heritage Square to be ready in three months". Timesofindia.indiatimes.com. 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Second phase of Chowk bazaar heritage square development work begins". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "Competition Entry: Redevelopment of Heritage Square & Riverfront | Komal Anand Doshi". Komalananddoshi.wordpress.com. 2011-11-25. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  4. "Surat Castle". Suratmunicipal.gov.in. 2016-11-24. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  5. "The Andrews Library in Surat turns 175 years old! – My Yellow Mug". Myyellowmug.com. 2015-07-07. Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  6. "Anglican church gets tallest cross | UCAN India". Ucanindia.in. 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  7. "Surat's 300-year-old Bible: Preserved, Intact, Unknown | Latest News & Updates at Daily News & Analysis". Dnaindia.com. 2013-08-11. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரம்பரியச்_சதுக்கம்&oldid=4128226" இலிருந்து மீள்விக்கப்பட்டது