இணை கேடயச்சுரப்பி புற்றுநோய்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இணை கேடயச்சுரப்பி புற்றுநோய் (அ) பராதைராய்டு புற்றுநோய் என்பது பாராதைராய்டுச் சுரப்பிகளில் தோன்றும் புற்றுநோயாகும். இச்சுரப்பி, உடலில் சுண்ணாம்புச் சத்தினைக் கையாளும் சுரப்பிகளாகும். மொத்தம் நான்கு சிறு பாராதைராய்டுச் சுரப்பிகள் தைராய்டுச் சுரப்பியின் மேல், ஒவ்வொரு பக்கமும், இரண்டு என உள்ளன. இவை கொண்டைக் கடலை அளவு சிறிதாக இருக்கும்.
தளர்ச்சி, மலச்சிக்கல், எலும்பு முறிவு, அதிகத் தாகம், அடிக்கடிச் சிறுநீர் போதல், சுரப்பியில் கல், பசியின்மை, வாந்தி, குமட்டல் முதலியனப் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். ஆரம்ப நிலையில் இந்நோயினைக் கண்டு கொள்வது கடினம். மருத்துவர் உடலையும் கழுத்தினையும் அழுத்திப் பார்த்துப் புற்று உள்ளதென்பதை அறிந்துகொள்வார். குருதியில் இணைகேடய இயக்குநீர், சுண்ணாம்புச் சத்து அளவுகள் மூலம் கண்டறியப்படுகிறது. அணுக்கரு மருத்துவமும்-செசுடாம்பின் இசுகேன்-மீயொலி படமும் புற்றினை அறிய உபயோகப்படுத்தப்படுகிகின்றன.
மருத்துவம்
தொகுஉயர் சுண்ணாம்புச் சத்தினைச் சரிசெய்யப் பொட்டசியம் நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. பாமிட்ரோனேட்டு எலும்பு மெலிவினையும், சுண்ணாம்புச் சத்து உடல் ஏற்றுக் கொள்ளுவதனையும் கட்டுப்படுத்துகிறது. பிஸ்பாசுபோனேற்று நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. அறுவை மருத்துவம் எளிது. மேலே கூறிய மருந்துகளும், கதிர் மருத்துவமும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மெதுவாக வளரும் இந்நோயினை மருத்துவத்தால் கட்டுபடுத்த முடியும். இந்நோய் நுரையீரல், எலும்பிற்கும் பரவலாம். இப்புற்றுநோயால் பாதிப்படைந்தவர்கள் இறப்பு ஏற்படும் நிலை உயர் கால்சியத்தால் நிகழ்கிறது. புற்றால் அல்ல. இப்புற்றுநோயானது சிகிச்சைக்குப்பின் மறுபடியும் வரலாம். அப்போது அறுவை சிகிச்சைப் பயனளிக்கக்கூடும். தொண்டைக் கரகரப்பு, தொற்றுநோய், குறை கால்சியம் ஆகியவை இந்நோய்க் கண்டவர்களில் காணப்படும் பிற கூறுகளாகும். கழுத்தில் கட்டி இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறலாம். இது, 30 வயதினைக் கடந்த ஆண், பெண் என இருபாலினரிடமும் காணப்படும் மிகவும் அரிதானப் புற்று நோயாகும். இந்நோய் நிகழ்வதற்கான காரணங்கள் தெரியவில்லை. கழுத்தில் கதிர் வீச்சினைப் பெற்றவர்களிடம் இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம். நாளமில்லாச் சுரப்பியில் புதுவளர்ச்சி உள்ளவர்களிடமும் இந்நோய் வளர வாய்ப்புகள் சற்று அதிகம்.
அறிகுறிகள்
தொகுகுருதியில் அதிக அளவுச் சுண்ணாம்புச் சத்துக் காணப்படும். இது பல உறுப்புக்களையும் பாதிக்கும். எலும்பில் வலிக் காணப்படும்.