பாரியூர் அமரபணீசுவரர் கோயில்

பாரியூர் அமரபணீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் பாரியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் பழம்பெரும்பதி என்றழைக்கப்பட்டது. [1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலின் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கருவறையில் மூலவராக அமரபணீசுவரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகும். கருவறையில் மூலவர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். ஆவுடையார் வலது புறத்தில் காணப்படுகிறது. மார்ச் மாதத்தில் இரு நாள்கள் சூரியன் மறையும் வேளையில் அதன் கதிர்கள் மூலவரின் பாணத்தின் மீது விழுவதைக் காணலாம். இறைவி சௌந்தரநாயகி இறைவனுக்கு இடது புறத்தில் அமைந்துள்ள பளிங்குக்கல் கருவறையில் தனிச் சன்னதி கொண்டுள்ளார். கோயிலின் தலமரம் மகிழமரம் ஆகும். தீர்த்தம் கிணற்று நீர் ஆகும்.சித்திரையில் பிரம்மோற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிசேகம் உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. [1]

அமைப்பு

தொகு

இக்கோவிலின் மூன்று நிலை இராஜகோபுரம் மேற்குநோக்கி அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கல்லால் ஆனதாகும். மூலவர் மற்றும் அம்மன் கருவறைகளுக்கு இடையே சன்முக சுப்பிரமானியர், அணுக்கை விநாயகர், பைரவர், அறுபத்துமூவர் ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன. பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சனீஸ்வரர், சண்டேஸ்வரர், நடராஜர் ஆகிய தெய்வங்கள் சந்நிதி கொண்டுள்ளனர். நவக்கிரக சன்னதியில் சூரியன் கிழக்கு பார்த்த நிலையில் உள்ளார். திருச்சுற்றில் சிவனும், மீனாட்சியும்ம தனித் தனி சன்னதிகளில் கிழக்கு பார்த்த நிலையில் காணப்படுகின்றனர். [1]

கோவில் திறந்திருக்கும் நேரம்

தொகு

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோவில் திறந்திருக்கும்.

திருவிழா

தொகு

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிசேகம்.

மேற்கோள்கள்

தொகு