பார்கவி தாவர்

இந்திய மனநல செயற்பாட்டாளர்

பார்கவி தாவர் (Bhargavi Davar) இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க மனநல ஆர்வலராவார். மனம் மற்றும் நடத்தை அறிவியல் நெறிமுறை தொடர்பான அறிவுசார் கண்டுபிடிப்புகள் மற்றும் அந்த துறைகளுக்குள் மனித சுதந்திரத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து இவர் தனது முனைவர் பட்டத்தை முடித்தார். இவரது பணி பாலினம், கலாச்சாரம் மற்றும் இயலாமை ஆய்வுகள் மற்றும் ஆசியாவில் நவீன மனநலக் கொள்கை சட்டங்களின் அடிப்படையாகக் கொண்டிருந்தது. மனநல சமூக குறைபாடுகள் உள்ளவர்களுக்கு குறிப்பாக சமூகத்தில் வாழும் உரிமைக்கான அனைத்து மனித உரிமைகளையும் முழுமையாக உணர்த்துவதற்காக வாதாடுவது பார்கவியின் பணியாகும்.

1999 ஆம் ஆண்டில் மனநலப் பிரச்சினைகளின் ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டிற்காக நிறுவப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட பாபு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக பார்கவி தவர் இருந்தார்.[1][2][3] மருத்துவ இதழ்களில் பார்கவி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[4]

நூற்பட்டியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. articles.timesofindia.indiatimes.com/2011-08-02/pune/29841875_1_limited-guardianship-persons-draft-bill
  2. "We are inhuman to the mentally ill". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 October 2012. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
  3. "Family and social support can help schizophrenics fight affliction". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 26 July 2013. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
  4. "Bhargavi Davar - PubMed - NCBI". ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்கவி_தாவர்&oldid=3370804" இலிருந்து மீள்விக்கப்பட்டது