பார்சி சீர்திருத்த இயக்கம்
பார்சி சீர்திருத்த இயக்கம் (Parsi Reform Movement) என்பது 1851-இல் நவரோஜி புர்துஞ்சி, சொராப்ஜி சாப்புர்ஜி பெங்காலி ஆகியோரால் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும். பெண் கல்வியை அவா்கள் ஆதரித்தனர். தங்கள் பார்சி சமூகத்தில் நிலவிய திருமண சடங்குகளில் சீர்திருத்தம் கொண்டு வர அவர்கள் விரும்பினர். ஜகத் மித்ரா என்ற இதழை நவ்ரோஜி நடத்தி வந்தார். இத்தகைய சீர்திருத்த முயற்சிகளால் பார்சி சமுதாயம் பெரும் முன்னேற்றம் கண்டது. 20-ம் நுாற்றாண்டின் இடைக்காலத்தில் பார்சி]களில் பெரும்பாலோர் முக்கிய பொறுப்புகளை ஏற்று இந்தியாவின் வளா்ச்சிக்கு சிறப்பான தொண்டினை ஆற்றினர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Economic Impact of British Rule: PARSI REFORM". 30 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2017.