பார்சி நுழைவாயில்

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ளது

பார்சி நுழைவாயில் (Barsi Gate) இந்தியாவில் சுல்தானிய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படும் ஒரு நுழைவாயிலாகும். அரியானா மாநிலத்தின் இசார் மாவட்டத்தில் இருக்கும் சுவர்களால் சூழப்பட்ட நகரமான ஆன்சி நகரத்தில் நுழைவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஐந்து நுழைவாயில்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது இந்த ஐந்து நுழைவாயில்களில் எஞ்சியிருக்கும் ஒரே வாயிலும் இதுமட்டுமேயாகும். கி.பி 1303 ஆம் ஆண்டில் சுல்தான் அலாவுதீன் கில்சியால் கட்டப்பட்டு கி.பி.1522 ஆம் ஆண்டில் இப்ராகிம் லோடியின் ஆட்சிக்காலத்தில் பழுதுபார்க்கப்பட்டது. 30 மீட்டர் உயரம் கொண்டுள்ள இவ்வாயில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது.[1] தில்லி நுழைவாயில் (கிழக்கு), இசார் நுழைவாயில் (மேற்கு), கோசைன் நுழைவாயில் (வட-கிழக்கு), உம்ரா நுழைவாயில் (தென்-கிழக்கு) என மற்ற நான்கு வாயில்களும் பெயரிடப்பட்டுள்ளன.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Corporation, Haryana Tourism. "Barsi Gate | Places of Interest | Hisar | Destinations | Haryana Tourism Corporation Limited". destination (in Indian English). Archived from the original on 2019-09-09. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  2. "Barsi Gate 2019, #2 top things to do in hansi, haryana, reviews, best time to visit, photo gallery | HelloTravel India". www.hellotravel.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  3. "Barsi Gate, Hisar". www.nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சி_நுழைவாயில்&oldid=3448103" இலிருந்து மீள்விக்கப்பட்டது