பார்டன் ஊசல்களின் அமைப்பு

FRS எனப்படும் அரச கழகத்தின் (Fellow of the Royal Society) உறுப்பினரும் (1858-1925), நாட்டிங்காம் பல்கலைகழகக் கல்லுாரியின் இயற்பியல் போராசிரியருமான பேரா . எட்வின் கென்றி பார்டன் உருவாக்கிய ஊசல்களின் அமைப்பே பார்டனின் ஊசல்களின் அமைப்பு (Barton's pendulums) என அழைக்கப்படுகிறது. இவர் கோள வடிவப் பொருட்களின் இயக்கங்கள் பற்றிய ஆய்வில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பார்டனின் ஊசல்களின் அமைப்பு ஒத்திசைவு (resonance) என்ற கோட்பாட்டை விளக்க உதவுகிறது.[1]

Colour photograph
பார்டன் ஊசல்கள் அமைப்பின் படம்

செயல்படும் விதம்

தொகு

ஒத்திசைவு அதிர்வெண்ணை விட அதிகமாகவோ, குறைவாகவோ அதிர்வெண் இருக்கும்போது, ஊசல்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை பார்டன் ஆய்வு செய்தார்.

பார்டனின் ஊசல்களின் அமைப்பில் படத்தில் உள்ளவாறு, வெவ்வேறு நீளங்களைக் கொண்ட 10 ஊசல்கள் ஒரே கம்பியில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. இதில் முதல் ஊசலானது, இயக்கும் ஊசல் (driver pendulum) எனப்படுகிறது. மொத்த ஊசல்களின் அமைப்பையும் இயக்க வேண்டியுள்ளதால் இயக்கும் ஊசல் மட்டும் கனமானதாக இருக்கும்.

அனைத்து ஊசல்களும் ஒரே கம்பியில் தொங்கவிடப்பட்டுள்ளதால் இயக்கும் ஊசலை அலைவுறச் செய்யும்போது மற்ற ஊசல்களும் அலைவுறும். இயக்கும் ஊசலின் அதிர்வெண்ணும் மற்ற ஏதாவது ஒரு ஊசலின் (அந்த ஊசலின் தொங்கவிடப்பட்ட கம்பி+குண்டின் நிறை, இயக்கும் ஊசலின் நிறை அளவிற்கு சமமாக இருக்க வேண்டும்) அதிர்வெண்ணும் சமமாக இருப்பின், அந்தவொரு ஊசல் மட்டும் அதிக வீச்சுடன் (Amplitude) அலைவுறும். மற்ற அனைத்து ஊசல்களும் குறைவான வீச்சுடன் அலைவுறும். இதுவே ஒத்திசைவுக் கோட்பாடாகும்.

ஒத்திசைவு அதிர்வெண் என்பது ஊசல்களின் நிறை, புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் ஊசல்கள் தொங்கவிடப்பட்ட கம்பியின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்தது.

பயன்

தொகு

வகுப்பறைகளில், ஒத்திசைவுக் கோட்பாட்டை எளிதாக விளக்க இச்சோதனை மிகவும் உதவுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "G2-12: BARTON'S PENDULUMS". Archived from the original on 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
  2. "Harvard Natural Sciences Lecture Demonstrations: Coupled Oscillations and Resonance: Barton's Pendulum". பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.

வெளியிணைப்புகள்

தொகு