பார்தோலின் நீர்க்கட்டி
பார்தோலின் நீர்க்கட்டி ( Bartholin's cyst) என்பது பார்தோலின் சுரப்பி பிறப்புறுப்புக்குள் இருக்கும் போது தடுக்கப்படுவதால் உண்டாகும் ஒருவகையான நீர்க்கட்டியாகும்[1] சிறிய நீர்க்கட்டிகள் ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்தும்.[1] பெரிய நீர்க்கட்டிகள் யோனியின் ஒரு பக்கத்தில் வீக்கத்தையும், உடலுறவில் அல்லது நடைபயிற்சியின் போது கடுமையான வலியையும் ஏற்படுத்தக்கூடும்.[1] If the cyst becomes infected an abscess occurs.[2] இந்த நீர்க்கட்டியில் தொற்று ஏற்பட்டால் புண் ஏற்பட்டு சீழ் உண்டாகக்கூடும். புண்கள் சிவப்பு நிறத்திலும் மிகவும் வேதனை உண்டாக்குபவையாகவும் இருக்கும்.[2]
பார்தோலின் நீர்க்கட்டி உண்டாவற்கான காரணங்கள் பொதுவாக அறியப்படவில்லை[1]. மேலும் சீழ்படிந்த கட்டியுடன் ஒரு பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது ஆனால் இது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று இல்லை.[3] Rarely gonorrhea may be involved.[1][4] அரிதாக கொனோறியா எனப்படும் மேகவெட்டை நோயினால் ஏற்பட்டதாகவும் இது இருக்கலாம். நோய் கண்டறிதல் பொதுவாக அறிகுறிகள் மற்றும் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டவையாகும்.[1] 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்ள பயாப்சி எனப்படும் உயிரகச்செதுக்கு பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.[5][1]
நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் சிகிச்சை எதுவும் தேவையில்லை. [2][1]. ஆனால் அறிகுறிகள் உள்ளதெனில் நோயாளிகளுக்கு சீழ்வடித்தல் முறை பரிந்துரைக்கப்படுகிறது.[2]. எளிய கீறல் அல்லது வெட்டு மூலம் சீழை வடித்து பின்னர் மீள்நிகழ்வாகத் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஒரு சிறுநீர் நீக்க குழாயை செருகி சிகிச்சையளிப்பதே சிறந்த முறையாகும்.[2][5] . மார்சுபியலைசேசன் எனப்படும் பையாக்க அறுவை சிகிச்சை முறை பயன்படுத்தலாம் பிரச்சினை மேலும் தொடர்ந்தால் முழு சுரப்பியும் அகற்றுவதே சிறப்பாகும். [2] மேலும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனையில் புற்றுநோய் இல்லை என உறுதிப்படுத்திய பின்னர் முழு சுரப்பியும் அகற்றுதல் சிறந்ததாகும். இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாக தேவைப்படுவதில்லை.[2] Antibiotics are not generally needed.[2].
பார்தோலின் நீர்க்கட்டிகளால் இரண்டு சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாதிக்கப்படுகின்றனர்[2]. இந்த நோய் பொதுவாக பெண்களுக்கு குழந்தை சுமக்கும் ஆண்டுகளில் ஏற்படுகிறது.[2]. 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த டென்மார்க் நாட்டு மருத்துவர் காசுபர் பார்தோலின் 1677 ஆம் ஆண்டு இச்சுரப்பிகளைப் பற்றி துல்லியமாக விவரித்தார்[6]. இவரை சிறப்பிக்கும் விதமாக இந்நோய்க்கு பார்தோலின் நீர்கட்டி எனப்பெயரிடப்பட்டது. பார்தோலின் நீர்க்கட்டி நோயின் உள்ளார்ந்த அடிப்படைகள் பபோர்டு வோர்டு என்பவரால் 1967 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. [6][7].
அறிகுறிகள்
தொகுபெரும்பாலான பார்தோலின் நீர்க்கட்டிகள் நோயாளிகளுக்கு எந்தவிதமான அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் நடைபயிற்சியின் போதும், உட்கார்ந்து உள்ளபோதும் [2]அல்லது உடலுறவுவின் போதும் வலி ஏற்படலாம்.[8] இந்த நீர்க்கட்டிகள் வழக்கமாக 1 முதல் 4 செ.மீ வரை இருக்ககூடும். மேலும் இவை யோனியின் உதடுகளின் நடுவில் அமைந்திருக்கும். பெரும்பாலான பார்தோலின் நீர்க்கட்டிகள் யோனியின் இடது அல்லது வலது பக்கத்தை மட்டுமே பாதிக்கின்றன. சிறிய நீர்க்கட்டிகள் பொதுவாக வலி மிகுந்தவையாக இருக்காது. ஆனால் மிகப் பெரிய நீர்க்கட்டிகள் குறிப்பிடத்தக்க கடுமையான வலியை ஏற்படுத்தும்.
நோய் உடலியங்கியல்
தொகுபார்தோலின் சுரப்பியின் நாளம் தடுக்கப்படும்போது பார்தோலின் நீர்க்கட்டி உருவாகிறது.[8] நோய்த் தொற்று அல்லது சளி அடைப்பு போன்ற காரணங்களால் சுரப்பியில் அடைப்பு ஏற்படக்கூடும்.[8] மேலும் பார்தோலின் சுரப்பியில் இருந்து சுரக்கும் நீர் வெளியேறாமல் தங்குவதால் நீர்க்கட்டியை உருவாக்குகிறது. [2].
நோய் கண்டறிதல்
தொகுபாப்பில்லிபெரம் இத்ராதெனோமா, கொழுப்புத் திசுக்கட்டிகள், மேல் தோலொத்த உடல் கட்டிகள், இசுகேன் சுரப்பி கட்டிகள் போன்ற கட்டிகளுக்கு பின்பற்றப்படும் நிபந்தனைகள் பார்தோலின் நீர்க்கட்டிகளுக்கும் பொருந்தும்[2]. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த உயிரகச்செதுக்கு பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படலாம்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Bartholin Gland Cysts". Merck Manuals Professional Edition. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 Omole, Folashade; Simmons, Barbara J.; Hacker Yolanda (2003). "Management of Bartholin's duct cyst and gland abscess". American Family Physician 68 (1): 135–40. பப்மெட்:12887119. http://www.aafp.org/link_out?pmid=12887119.
- ↑ Marx, John A. Marx (2014). "Skin and Soft Tissue Infections". Rosen's emergency medicine : concepts and clinical practice (8th ed.). Philadelphia, PA: Elsevier/Saunders. pp. Chapter 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1455706051.
- ↑ Ferri, Fred (2017). Ferri's clinical advisor 2018 : 5 books in 1. Elsevier Canada. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0323280495.
- ↑ 5.0 5.1 Lee, MY; Dalpiaz, A; Schwamb, R; Miao, Y; Waltzer, W; Khan, A (May 2015). "Clinical Pathology of Bartholin's Glands: A Review of the Literature.". Current Urology 8 (1): 22–5. doi:10.1159/000365683. பப்மெட்:26195958.
- ↑ 6.0 6.1 Knaus, John V.; Isaacs, John H. (2012). Office Gynecology: Advanced Management Concepts (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781461243403.
- ↑ Williams Gynecology (2 ed.). McGraw Hill Professional. 2012. p. 1063. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780071804653.
- ↑ 8.0 8.1 8.2 Eilber, Karyn Schlunt; Raz, Shlomo (September 2003). "Benign Cystic Lesions of the Vagina: A Literature Review". The Journal of Urology 170 (3): 717–722. doi:10.1097/01.ju.0000062543.99821.a2. பப்மெட்:12913681. https://archive.org/details/sim_journal-of-urology_2003-09_170_3/page/717.