பார்த்திபனூர் சங்கரனார் கோயில்
சங்கரனார் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பார்த்திபனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]
பார்த்திபனூர் சங்கரனார் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°35′11″N 78°27′28″E / 9.5864°N 78.4577°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | சொக்கநாதர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராமநாதபுரம் மாவட்டம் |
அமைவிடம்: | பார்த்திபனூர் |
சட்டமன்றத் தொகுதி: | பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 103 m (338 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சங்கரனார் (சொக்கநாதர்) |
தாயார்: | மீனாட்சி அம்மன் |
குளம்: | சங்கரன் குளம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஐப்பசி அன்னாபிசேகம், சிவராத்திரி, திருக்கிருத்திகை |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 103 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பார்த்திபனூர் சங்கரனார் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°35′11″N 78°27′28″E / 9.5864°N 78.4577°E ஆகும்.
இக்கோயிலில் மூலவர் சங்கரனார் (சொக்கநாதர்) மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் மாவலிங்க மரம்; தீர்த்தம் சங்கரன் குளம் ஆகும். காரணாகமம் முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. ஐப்பசி அன்னாபிசேகம், சிவராத்திரி மற்றும் திருக்கார்த்திகை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சங்கரனார் (சொக்கநாதர்), மீனாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், சித்தி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலமுருகன், பைரவர் மற்றும் நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2] அர்ச்சுனன், நக்கீரர் ஆகியோர் வழிபட்ட தலமாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ ValaiTamil. "அருள்மிகு சங்கரனார் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ "Sankaranar Temple : Sankaranar Sankaranar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ "Arulmigu Sokkanatha Samy Temple, Parthipanur - 623608, Ramanathapuram District [TM037729].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.