பார்த்திபம்

மறைஞான தேசிகர் எழுதிய சிவஞான சித்தியார் உரையில் மேற்கோள் மேற்கோள் பாடல்களுடன் குறிப்பிடப்படும் நூல்களில் பார்த்திபம் என்பது ஒரு நூல். [1] இது சைன சித்தாந்தம் கூறும் நூல் எனத் தெரிகிறது. அட்ட-குணங்கள் [2] [3] இவை எனச் சிவஞான சித்தியார் கூறும் 296 ஆம் பாடல் உரையில் இந்த நூலும் பாடலும் உரை விளக்கத்தில் தரப்பட்டுள்ளது.

இந்த நூல் இப்போது இல்லை. திருவாவடுதுறை ஆதீனத்தில் 'பார்த்திவ பத்ததி' என்னும் பெயருடன் ஒரு நூல் பயிலப்பட்டு வருகிறது. இது இது பிற்கால நூல். பார்த்திபம் முற்கால நூல்.

பாடல் தொகு
தோற்றும் அனந்த ஞானத்தோடு அனந்த தரிசனமும்
தோற்றும் அனந்த வீரத்தோடு அனந்த சுகத்துடனே
ஆற்றிய நாமம் இன்மை கோத்திரம் இன்மை ஆயுல் [4] இன்மை
ஏற்றியதோர் அழியாகு இயல் அன்பர் இங்கு ஏந்திழையே [5]

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 285. 
  2. எட்டு குணங்கள்
  3. திருக்குறள் 9 எண்குணத்தான் என்பதற்குப் பரிமேலழகர் உரை தரும் விளக்கம் - (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது.
  4. ஆயுள்
  5. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்திபம்&oldid=1451631" இலிருந்து மீள்விக்கப்பட்டது