பார்பரா எலைன் ரூத் பிரவுன்
பார்பரா எலைன் ரூத் பிரவுன் (Barbara Elaine Ruth Brown) என்பவர் ஓர் அமெரிக்க உயிரியலாளர் மற்றும் மக்கள் சேவகர் ஆவார்.
பார்பரா எலைன் ரூத் பிரவுன் Barbara Elaine Ruth Brown | |
---|---|
பிறப்பு | 14 பிப்ரவரி 1929 சிக்காகோ |
இறப்பு | 7 சனவரி 2019 |
படித்த கல்வி நிறுவனங்கள் | விசுகான்சின் பல்கலைக்கழகம் |
பணி | விலங்கியல், பறவையியல் நிபுணர் |
பணியகம் | இயற்கை வரலாற்று கள அருங்காட்சியகம் |
தொடக்க காலம்
தொகுபார்பரா உருசலுக்கு இவர் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் சிக்காக்கோவில் பிறந்தார். பிரவுனின் பெற்றோர் ருமேனியா மற்றும் உருசியாவிலிருந்து குடியேறிய யூதர்களாவர். [1]விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் ரூத் பிரவுன் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். [1][2] 1953 இல், ரோசர் பிரவுனை மணந்து கொண்ட பிரவுனுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். [1]
தொழில்
தொகு47 ஆண்டுகளாக அமெரிக்க மாநிலமான இல்லினொய்சிலுள்ள சிகாகோ நகரத்தின் இயற்கை வரலாற்று கள அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். பிரவுனின் வாழ்க்கை விலங்கியல் நிபுணர் பிலிப் எர்சு கோவிட்சின் உதவியாளராகத் தொடங்கியது. [2] இவரது கள ஆராய்ச்சியில் செர்ராதோ சவானா மற்றும் பிரேசிலின் அட்லாண்டிக் கடலோர வனப்பகுதிக்கான பயணங்களும் அடங்கும். [2]. ரூத் பிரவுன் ஒரு திறமையான விலங்கு சேகரிப்பாளராகவும் மாதிரிகள் தயாரிப்பது மற்றும் பொறிகளை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருந்தார். [2]
பெயர்கள்
தொகுபிரவுனின் பெயரில் 4 புதிய இனங்கள் உள்ளன. [3][1] அவை பின்வருமாறு: •ஐசோத்ரிக்சு பார்பராபிரவுனே - பார்பரா பிரவுனின் தூரிகை-வால் எலி [4][5] •காலிசுபசு பார்பராபிரவுனே - பார்பரா பிரவுனின் வனப்பகுதி [5] [ •அப்போமிசு பிரவுனோரம் - மவுண்ட் தபுலாவ் வன சுண்டெலி [2] •வடராவிசு பிரவுனே - ஒரு புதைபடிவ பறவை [2]
சேவை
தொகுதனது கணவர் ரோசர் பிரவுனுடன், இவர் கள அருங்காட்சியகம், மினசோட்டாவின் அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் சிகாகோ தாவரவியல் பூங்கா ஆகியவற்றை ஆதரித்தார். [3] இந்தப் பணியில் மினசோட்டாவின் புதிய பறவையியல் துறையின் அறிவியல் அருங்காட்சியகத்தை இயக்கும் புதிய பதவி - பறவையியல் துறையின் பார்பரா பிரவுன் நாற்காலி ஆகியவற்றை உள்ளடக்கியது.ஆகும். [6]
ரூத் பிரவுன் 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Barbara Brown Obituary - Skokie, IL | Chicago Tribune".
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Megan, Graydon. "Barbara Brown, Field Museum research assistant on expeditions to far-flung locales, dies". chicagotribune.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
- ↑ 3.0 3.1 "Barbara Brown, Field Museum staffer, donor who had 4 species named for her, dies".
- ↑ bpatterson (Feb 23, 2011). "Scientists discover striking new species of cloud-forest rodent in Peru". Field Museum.
- ↑ 5.0 5.1 Beolens, Bo. (2009). The eponym dictionary of mammals. Watkins, Michael, 1940-, Grayson, Michael. Baltimore: Johns Hopkins University Press. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9533-3. இணையக் கணினி நூலக மைய எண் 593239356.
- ↑ "$2 million donation is largest in Science Museum of Minnesota's history". May 18, 2018.