பார்மர் மருத்துவக் கல்லூரி

பார்மர் மருத்துவக் கல்லூரி (Barmer Medical College) என்பது இந்தியாவின் இராஜஸ்தானில் உள்ள பார்மரில் உள்ள ஒரு முழுமையான மூன்றாம் நிலை மருத்துவக் கல்லூரி ஆகும். இது 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கல்லூரி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (எம்பிபிஎஸ்) பட்டம் அளிக்கிறது. செவிலியர் மற்றும் இணை மருத்துவப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்த கல்லூரி ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கான மாணவர் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. கல்லூரி ஆகஸ்ட் 2019 முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படிப்புகளைத் தொடங்கியுள்ளது. [1] [2]

பார்மர் மருத்துவக் கல்லூரி
வகைமருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
உருவாக்கம்2019
முதல்வர்ஆர். கே. அசேரி
அமைவிடம்
இந்தியா
சேர்ப்புஇராஜஸ்தான் சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
இணையதளம்education.rajasthan.gov.in/content/raj/education/barmer-medical-college/en/home.html

படிப்புகள்

தொகு

பார்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் இளங்கலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படிப்புகளுக்கான கல்வி மற்றும் பயிற்சியை நடத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு