பாற்குடம் எடுத்தல்
பாற்குடம் எடுத்தல் (Palkkudam Eduthal) என்பது இந்து சமய வழிபாடுகளில் ஒன்றாகும். கௌமாரம், சாக்தம் வழிபாடுகளில் இந்தப் பால்குடம் எடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
வேண்டுதல்கள், நேர்த்திக் கடன், குடும்ப வளமை போன்ற காரணங்களால் பால் குடம் எடுக்கின்றார்கள்.
பால்குடம் எடுக்கும் முறை
தொகுகையில் காப்புக் கட்டி, எட்டு நாள் விரதம் இருப்பர். பால் குடம் எடுக்கும் நாளில் அருகிலிருக்கும் விநாயகர், சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற ஆடை அணிந்து சொம்பு, குடம் போன்றவற்றில் கறந்த பாலைப் பூசை செய்கிறார்கள். பின் அங்கிருந்து ஊர்வலமாகக் கிளம்பி அம்மன் அல்லது முருகன் கோவிலை அடைந்து கொண்டுவந்திருக்கும் பாலை அபிசேகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.
கோயில்கள்
தொகு- குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயிலில் குழந்தை வேலாயுதருக்கு விசாக நாளில், பால்குடமேந்தி வழிபடுகின்றனர். [1]
குடும்ப நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த வழிபாடு முறை, அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் நலனுக்காகவும் சமீபகாலமாக மேற்கொள்ளப்படுகின்றன.[2]