குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்

குழந்தை வேலாயுதசாமி கோயில், (Kurunthamalai Kulanthai Velayuthaswamy Temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், காரமடைக்கருகில் அமைந்துள்ளது.. இக்கோயிலின் முதன்மைக் கடவுளான முருகன், குழந்தை வேலாயுதசாமி என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில் பழனி முருகனைப் போலவே காணப்படுகிறார். இந்து அறநிலையத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூன் 29, 2012 இல் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது[1]. தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் செப்டம்பர் 11, 2011 முதல் இங்கும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.[2] குருந்தமலை முருகன் கோவில் கி.பி 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த குருந்தமலை முருகன் கோயில்.[சான்று தேவை]

குழந்தை வேலாயுதசாமி கோயில்
குழந்தை வேலாயுதசாமி கோயில் is located in தமிழ் நாடு
குழந்தை வேலாயுதசாமி கோயில்
குழந்தை வேலாயுதசாமி கோயில்
ஆள்கூறுகள்:11°17′20″N 76°55′13″E / 11.288854°N 76.920319°E / 11.288854; 76.920319
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு:குருந்தமலை, மருதூர் ஊராட்சி, காரமடை ஊராட்சி ஒன்றியம்
கோயில் தகவல்கள்
மூலவர்:குழந்தை வேலாயுதசாமி

அமைவிடம்

தொகு

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதூர்[3] எனும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான குருந்தமலையில் இக் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) காரமடை வரை சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம். மேட்டுப்பாளையத்திலிருந்தும் இக் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் அமைப்பு

தொகு

குருந்தமலை அடிவாரத்தில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தொடங்குகின்றன. படிக்கட்டுகளின் இருபுறமும் இராஜகம்பீர விநாயகர் சன்னிதி, கன்னிமார் சன்னிதி, நாகர் சன்னிதி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னிதி, இடும்பன், கடம்பன், வீரவாகு-மூவரின் சன்னிதிகள் உள்ளன. அவற்றைத் தாண்டியதும் படிக்கட்டுகளின் ஒருபுறம் காசிவிசுவநாதர் சன்னிதி விசாலாட்சியம்மனுக்குத் தனி சன்னிதியுடனும் மறுபுறம் தீபத்தூண் மற்றும் இராஜநாகலிங்க சன்னிதியும் அமைந்துள்ளது. இவ்விருவர் சன்னிதிகளைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம் சன்னிதி, வள்ளி-தேவானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரக, காலபைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.

காசிவிசுவநாதர் சன்னிதி தாண்டி மேலே குழந்தை வேலாயுதசாமி சன்னிதி இராஜகோபுரத்துடன் சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுதசாமி மேற்கு நோக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=484073&Print=1 குருந்தமலை கோவில் கும்பாபிஷேக விழா, தினமலர், ஜூன் 11, 2012.]
  2. 106 திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம், தினபூமி, செப்டம்பர் 9, 2011
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.

வெளி இணைப்புகள்

தொகு