பாலகொண்டராயன் மலை

பாலகொண்டராயன் மலை அல்லது பாலகொண்டராய துர்கம் என்பது தமிழ்நாட்டில், கிருட்டிணகிரிமாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த மலையாகும். இம்மலையின் தோற்றம் பார்ப்பதற்கு அரங்கநாதர் பள்ளிகொண்டது போன்று காணப்படுவதாக கூறுவர். இம்மலைக்குச் செல்ல வேப்பனப்பள்ளி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி கிராமம் வழியாகவும், கிருட்டிணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலை எண் 7 இல் உள்ள சூளகிரி ஓன்றியம் மேலுமலை கிராமம் வழியாகவும் செல்ல பாதை உள்ளது. இவ்விரு வழிகளும் மலையில் ஒன்றாக கூடுகின்றன.

தேசிய நெடுஞ்சாலை எண்7 இல் இருந்து மலையின் தோற்றம்
பாலகொண்டராயசாமி கோயில் பக்கவாட்டுத் தோற்றம்
பாலகொண்டராயசாமி கோயில் முகப்பு

கோட்டை

தொகு

இம்மலையில் பழங்காலக் கோட்டை உள்ளது. இது காட்டரண் மிக்கக் கோட்டையாகும். இக்கோட்டை தற்போது மிகவும் சிதைந்து உள்ளது. இங்கு எக்காலத்திலும் வற்றாத கஜாகுளம், விசுவேசுவர சுனை, நெய் சுனை ஆகியன உள்ளன.

பாலகொண்டராயசுவாமி கோயில்

தொகு

இந்த மலை உச்சியில் பாலகொண்டராய சுவாமி என்ற பெயரில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் ஒரு பழங்கால கோயிலாகும். இக்கோயில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது. இதன் பிறகு இக் கோயிலைப் புதுப்பித்து 6.பெப்ரவரி 2009இல் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த மலையில் ஆறு ஏக்கர் பரப்பளவில் உள்ள சமதளம் தேர் மைதானம் என அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் இங்கு தேர் திருவிழா நடந்திருக்கிறது என்பது செவிவழி செய்தியாகும்.

படக்காட்சியகம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகொண்டராயன்_மலை&oldid=2254930" இலிருந்து மீள்விக்கப்பட்டது