பாலக்காடு தொடருந்து கோட்டம்

பாலக்காடு ரயில்வே கோட்டம் (Palakkad railway division, முன்னர் ஒலவக்கோடு ரயில்வே பிரிவு[1]), இந்திய இரயில்வே, தென்னக இரயில்வேயின் ஆறு நிர்வாகப்பிரிவுகளில் ஒன்று. 1956 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 31 ஆம் நாள் தென்னக இரயில்வேயின் ஐந்தாவது கோட்டமாக தோற்றுவிக்கப்பட்டது.[2]இதன் தலைமையிடம் பாலக்காடு ஆகும். நிர்வாக 588 பாதை கிலோமீட்டர் பாதையில் உள்ள மாநிலங்கள்: கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் (மாஹி). இக்கோட்டத்தின் கீழ்வரும் முக்கிய நிலையங்கள் பாலக்காடு இணைப்பு, சோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், மங்களூரு இணைப்பு மற்றும் மத்திய மங்களூரு ஆகும்.

பாலக்காடு தொடருந்து கோட்டம்
கண்ணோட்டம்
தலைமையகம்பாலக்காடு, கேரளா, இந்தியா
வட்டாரம்கர்நாடகா
கேரளா
பாண்டிச்சேரி
தமிழ்நாடு
செயல்பாட்டின் தேதிகள்ஆகஸ்ட்t 31, 1956; 60 வருடங்கள் முன் (1956-08-31)
தொழில்நுட்பம்
தட அளவி1676mm
மின்மயமாக்கல்25 kV AC 50 Hz
நீளம்588 கி.மீ (365 mi)

காலக்கோடு

தொகு
  • 1956: போத்தனூர் கோட்டம் கலைக்கப்பட்டு இன்றைய பாலக்காடு கோட்டம் ஒலவக்கோடு கோட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது
  • 1976: ஜோலார்பேட்டை-இருகூர் இருவழித்தடமாக்கப்பட்டது.
  • 1979: ஷோரனூர்-எர்ணாகுளம் தடம் திருவனந்தபுரம் கோட்டத்தில் இணைக்கப்பட்டது
  • 1984: பாலக்காடு-ஷோரனூர் இருவழிதடம் முழுமையடைந்தது.
  • 1991: திருப்பத்தூர்-சேலம் தடம் மின்மயமாக்கப்பட்டது.
  • 1992: சேலம்-ஈரோடு தடம் மின்மயமாக்கம்.
  • 1994: போத்தனூர்-பாலக்காடு இரட்டை தனித் தடங்கள்
  • 1995: பாலக்காடு-ஷோரனூர் தடம் மின்மயமாக்கம்.
  • 1996: ஈரோடு-பாலக்காடு தடம் மின்மயமாக்கம்.
  • 1997: பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் தடம் மின்மயமாக்கம்.
  • 2000, குறுகிய இருப்புப்பாதை தொடருந்து பெட்டிகள் மீளமைக்கப்பட்டு நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்தில் வெற்றிகரமாக ஓடின.
  • 2007: பாலக்காடு கோட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பாதைகள் புதிதாக உருவாக்கிய சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டன.
  • 2014: ஷோரனூர்-மங்களூர் முழுத்தடமும் இருவழித் தடமாக்கப்பட்டது[3]
  • 2016: பாலக்காடு-பொள்ளாச்சி இருப்புப் பாதை அகலப்பாதையாக்கம் முடிவு பெற்றது.
  • 2017: ஷோரனூர்-மங்களூர் தடம் மின்மயமாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு