பாலசுப்பிரமணியன் சுந்தரம்
பாலசுப்பிரமணியன் சுந்தரம் (Balasubramanian Sundaram) என்பவர் இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் பணிபுரிகிறார்.[1]
பாலசுப்பிரமணியன், 1994ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட பிந்தைய முதுமுனைவர் ஆய்வினை அமெரிக்காவின் பிலிப்பெய்டாவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். 1998ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் சேர்ந்த இவர் தற்பொழுது பேராசிரியராக உள்ளார்.[2]
2011ஆம் ஆண்டில், வேதியியல் அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Home page of Dr. Balasubramaniam Sundaram"
- ↑ "Prof. Balasubramanian Sundaram". JNCASR. Archived from the original on 2020-02-03. பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.
{{cite web}}
: line feed character in|title=
at position 6 (help)CS1 maint: unfit URL (link) - ↑ "11 scientists selected for Shanti Swarup Bhatnagar award" ibn live, Sep 26,2011