பாலத்தளி துர்க்கையம்மன் கோயில்

பாலத்தளி துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் 4 கிமீ தொலைவில் உள்ள உதயசூரியபுரத்திற்கு அருகே உள்ள பாலத்தளி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பாலை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பாலத்தளி என்றழைக்கப்படுகிறது.

மூலவர்

தொகு

இக்கோயிலில் மூலவராக துர்க்கையம்மன் உள்ளார். நான்கு கரங்களைக் கொண்டு சங்கு சக்கரத்தினை கைகளில் கொண்டு அபய முத்திரையில் எருமைத்தலையின் மீது நின்ற நிலையில் அம்மன் உள்ளார். [1]

வரலாறு

தொகு

மேய்ச்சலுக்கு வந்த பசுக்கள் தாமாக குறிப்பிட்ட இடத்தில் பார் சொரிந்து நிற்பதைக் கண்ட மக்கள், அங்கு தோண்ட, நின்ற கோலத்திலிருந்த அம்மன் சிலையைக் கண்டனர். அவருக்காக எழுப்பப்பட்டதே இக்கோயிலாகும். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014