பாலவநத்தம்
பாலவநத்தம் (Palavanatham) இந்தியாவில், தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில், அமைந்துள்ள கிராமங்களில் ஒன்றாகும். பாலவநத்தம் முக்கிய நகரமான அருப்புக்கோட்டையிலிருந்து 11.6 கி.மீ தூரத்திலும், மாவட்டத் தலைநகரான விருதுநகரிலிருந்து 8.8 கி.மீ தூரத்திலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 460 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
ஊரின் சிறப்பு
தொகுநான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்த பாண்டித்துரைத் தேவர் (கி.பி 1867-1911) பாலவநத்தத்தில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த பல்துறை அறிஞர். இவர் இராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் பாலவநத்தம் சமீன்தார் ஆவார். இவர் கலைகள், இலக்கியப் பணிகளைஊக்குவித்தார்.
அருகாமையில் உள்ள ஊர்கள்
தொகுஅருகிலுள்ள கிராமங்கள்: வலுக்கலொட்டி (1.2 கி.மீ), வரலொட்டி (3 கி.மீ), வில்லிபத்ரி (3.4 கி.மீ). மெட்டுக்குண்டு (3.4 கி.மீ), சூலக்கரை (4.8 கி.மீ)
நகரங்கள்: விருதுநகர் (8.8 கி.மீ), அருப்புக்கோட்டை (11.6 கி.மீ), காரியாபட்டி (17 கி.மீ), திருச்சுழி (20.3 கி.மீ)
கோவில்கள்
தொகுகைலாசநாதர் கோவில், பெந்தெகொசுதெ சபை, மசூதி, சிறு தெய்வக் கோவில்கள், பத்ரகாளியம்மன் கோவில், கன்னிமாரியம்மன் கோவில் என அனைத்து மதக் கோவில்களும் இங்குள்ளன.
பள்ளிகள்
தொகு- த.சு.லு.தி.துவக்கப் பள்ளி
- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
- அரசு மேல்நிலைப் பள்ளி
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு