பாலிசென்ட்ரைடீ
பாலிசென்ட்ரைடீ | |
---|---|
மானோசிரசு பாலியகாந்தசு (Monocirrhus polyacanthus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | பாலிசென்ட்ரைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
பாலிசென்ட்ரைடீ (Polycentridae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை தென்னமெரிக்காவைச் சேர்ந்த நன்னீரில் வாழும் சிறிய மீன்கள் ஆகும். இவற்றின் தலை பெரியது. மறைந்திருப்பதற்கு வாய்ப்பான இவற்றின் நிறமும், வெளியே துருத்தப்படக்கூடிய வாயும், இவை நகரும் விதமும் தம்மிலும் பெரிய இரைகளைக் கூடப் பிடிப்பதற்கு இக்குடும்ப மீன்களுக்கு உதவியாக உள்ளன. இவை பிற மீன்கள், நீர்வாழ் பூச்சிகள், முதுகெலும்பிலிகள் போன்றவற்றைப் பிடித்து உண்கின்றன.
பேரினங்களும், இனங்களும்
தொகு- பேரினம் மானோசிரசு (Monocirrhus)
- மானோசிரசு பாலியகாந்தசு (Monocirrhus polyacanthus)எக்கெல், 1840
- பேரினம் பாலிசென்ட்ரசு (Polycentrus)
- பாலிசென்ட்ரசு இசுக்கோம்பர்க்கீயை (Polycentrus schomburgkii)மில்லரும் டிரோச்செலும் 1849
வகைப்பாட்டுக் குறிப்பு
தொகுபாலிசென்ட்ரசு இசுக்கோம்பர்க்கீயை முன்னர் நாண்டைடீ குடும்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)