பாலின அருங்காட்சியகம், டென்மார்க்

பாலின அருங்காட்சியகம், டென்மார்க் (KØN-Gender Museum Denmark) என்பது டென்மார்க்கில் உள்ள மகளிர் அருங்காட்சியகம் ஆகும். இது முன்னர் மகளிர் அருங்காட்சியகம் என அழைக்கப்பட்டது. இது டென்மார்க்கின் ஆர்ஹசில் உள்ள ஒரு வரலாற்று அருங்காட்சியகமாகும்.[1] இது டென்மார்க்கில் பாலினம் மற்றும் பாலியல் கலாச்சார வரலாற்றை மையமாகக் கொண்டுள்ளது.[2] 1982ஆம் ஆண்டில் பெண்கள் வரலாற்று அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது. மேலும் இது 1857-இல் கட்டப்பட்ட முன்னாள் ஆர்ஹஸ் சிட்டி அரங்கத்தில் செயல்பட்டது. 2016ஆம் ஆண்டில், அருங்காட்சியகத்தின் கருப்பொருள் கவனம் பாலினம் மற்றும் பாலியல் பிரச்சினைகளைப் பரந்த அர்த்தத்தில் உள்ளடக்கியது. இதன் விளைவாக, அருங்காட்சிசாலையின் பெயர் KØN (ஆங்கிலத்தில் பாலினம்) என 2021-இல் மாற்றப்பட்டது.[3]

பாலின அருங்காட்சியகம், டென்மார்க்
KØN - Gender Museum Denmark
பாலின அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1982 (1982)
அமைவிடம்ஆர்ஹஸ், டென்மார்க்
வலைத்தளம்konmuseum.dk/

2012ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த அருங்காட்சியகம் மாநில, நகராட்சி மற்றும் தனியார் நிதியிலிருந்து DKK 10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இயக்கப்பட்டது. கே. ஓ. என். இல் ஒரு காபி நிலையமும் அடுமனையும் உள்ளது.[4]

செயல்பாடுகள்

தொகு

நிரந்தர மற்றும் தற்காலிக கண்காட்சிகளுக்கு மேலதிகமாக, பாலின் கல்வி ரீதியான வெளிப்புறத் திட்டங்களை வழங்குகிறது.[5] 2014ஆம் ஆண்டில், ஆர்ஹஸ் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் கற்பிக்க ஆண்டிற்கு DKK 500,000 வருடாந்திர மானியமாக வழங்க ஒப்புதல் அளித்தது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. KØN - Gender Museum Denmark: About KØN (in டேனிய மொழி)
  2. "Danmarks kvindemuseum i pengeknibe" [Denmark's Women's Museum in Money Pinch]. TV2 Nyhederne (in டேனிஷ்). TV2. 24 February 2011. பார்க்கப்பட்ட நாள் 12 June 2013.
  3. KØN - Gender Museum Denmark: Museum's History (in டேனிய மொழி)
  4. Bryd, Tina (13 November 2012). "Kvinders liv er penge værd" (in da). Jyllands-Posten. http://jyllands-posten.dk/aarhus/ECE4906948/kvinders-liv-er-penge-vaerd/. 
  5. KØN - Gender Museum Denmark: Teaching (in டேனிய மொழி)
  6. Hans Petersen (25 September 2014). "Kvindemuseet to teach schoolchildren about sex" (in டேனிஷ்). பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Aarhus